கேர் டேக்கரா.. முக்கிய முடிவுகளை எடுக்க போறதில்லையே.. பிறகு எதுக்கு கேர்டேக்கர்.. துரைமுருகன் நக்கல்
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார்
Recommended Video
சென்னை: "கேர் டேக்கரா.. அதிமுக அரசுதான் எதுவும் முக்கிய முடிவு எடுக்க போறது இல்லையே.. அப்பறம் எதுக்கு கேர் டேக்கர்" என்று துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்துள்ளார்.
பொதுவாக துரைமுருகன் ரொம்பவும் ஜாலி டைப். எப்பவுமே இவரது நகைச்சுவை பேச்சுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். ஆனால் யாரையும் புண்படாதவாறு கிண்டலடிப்பதுதான் இவரது ஸ்பெஷலாட்டியே! பெரும்பாலும் இவர் கிண்டல் அடித்து பேசினாலும், யாருக்கும் கோபமும் வராது.

அந்த வகையில், இன்று முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பற்றியும் ஒரு கமெண்ட் சொல்லி உள்ளார். 14 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து என முதல்வர் கிளம்பி உள்ளார். இந்நிலையில், அந்த 14 நாட்களுக்கும் தமிழ்நாட்டில் யார் பொறுப்பு முதல்வராக இருப்பார் என்ற பேச்சு ஒரு வார காலமாகவே எழுந்துவந்தது.
ஒருவேளை ஓபிஎஸ்-தான் அந்த பொறுப்பில் இருந்து பார்த்து கொள்வாரோ? என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டன. ஆனால், வெளிநாடுகளில் இருந்த படியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பார் என்று கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இது சம்பந்தமாக சென்னை ஏர்போர்ட்டில் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும்போது, "முதல்வரின் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தொழில்நுட்பம் பெருகிவிட்டது. ஊடகங்கள்தான் கேர் டேக்கர், கேர் டேக்கர் என்று கூறிவருகின்றன. தமிழ்நாடு மக்களை கேர் டேக் செய்யும் அளவுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தமிழக அரசும் உள்ளது. முழுமையான அளவு முதலீடுகளை பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் அமையும்" என்றார்.
ஜெயக்குமாரின் இந்த கருத்துக்குதான் துரைமுருகன் கருத்து சொல்லி உள்ளார். முக்கியமான முடிவுகளை எடுக்கதான் கேர்டேக்கர். ஆனால் அதிமுக அரசுதான் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கப்போவதில்லையே... அப்புறம் எதுக்கு கேர்டேக்கர்" என்று செம கலாய் கலாய்த்துள்ளார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications