சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? ஓட்டு வித்தியாசத்தில சாதனை படைக்கணும்... உதயநிதி நேர்காணல் கலகல
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்டத்துக்கான வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார்.
சென்னை: போட்டியிட சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? எவ்வளவு செலவு பண்ணுவீங்க போன்ற சம்பிரதாய கேள்விகள் மட்டுமல்லாது வாக்கு வித்தியாசம் சாதனை படைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று உதயநிதியிடம் சொல்லியிருக்கிறாராம் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்பட்டன, இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 234 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் 5 நாட்கள் திமுக நேர்காணல் நடத்தியது. கடந்த 2ம் தேதி தொடங்கிய திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது.

அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல்
நேர்காணல் குழுவில் தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை. முருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, எச். ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

கொளத்தூரில் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினிடம் திமுகவினர் நேர்காணல் நடத்தினர். கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதே போல, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

ஜெயிச்சிருவீங்களா?
விருப்பமனு தாக்கல் செய்தவர்களை அமர வைத்து கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நின்று கொண்டே கேள்விகளுக்கு பதிலளித்தார். சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? தொகுதியில உங்களுக்கு செல்வாக்கு எப்படி இருக்கு என்று துரைமுருகன் கேட்க நேர்காணல் கலகப்பாகவே நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை
தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கேட்டதோடு, நிற்கும் தொகுதியில் ஜெயித்து சாதனை படைக்கும் அளவிற்கு ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் துரைமுருகன். சிரித்துக்கொண்டே நிச்சயம் ஜெயிப்பேன் என்று உதயநிதி சொல்ல கடைசி நாள் நேர்காணல் கலகலப்பாகவே முடிந்துள்ளது.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?










Click it and Unblock the Notifications