Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றும் திமுகவில் விருப்ப மனு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்த துரைமுருகன் வந்திருந்தார். அப்போது அவரிடம் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் கட்சி விலகியதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.

Duraimurugan reaction

அதற்கு துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் வானத்தை பார்த்தபடி நான் இப்படி பார்க்கிறேன் என பதில் அளித்தார். இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியை அமைச்சர்களோ முதல்வரோ நடத்தவில்லை, அதிகாரிகள்தான் நடத்துகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளாரே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது.

அதற்கு துரைமுருகன், "போகும் போது அப்படி சொல்லாமல் , நல்ல ஆட்சி நான் போய்ட்டு வரேன்னா சொல்வாங்க? ஒருத்தர் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் ஆட்சி சரியில்லை என்று சொல்லிவிட்டுத்தான் வெளியேறுவார்கள், ரொம்ப நல்ல ஆட்சி, நான் வெளியேறுகிறேன் என சொல்லமாட்டாங்கல்ல" என துரைமுருகன் தெரிவித்தார்.

மீண்டும் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, பேச்சுவார்த்தை என் சப்ஜெக்ட் அல்ல, அதனால் என்னை விட்டுடுங்கோ என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

காமெடி பேச்சு

பொதுவாக துரைமுருகன் காமெடியாக பேசுவதில் வல்லவர். பிரஸ் மீட் என்றில்லை, சட்டசபையிலும் அவர் காமெடியாகவே பேசுவார். இதுவரை அவர் பேசியவற்றின் தொகுப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.

ஒருமுறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, குறுக்கிட்ட துரைமுருகன், "அடா டா டா டா... என்னா ஒரு நடிப்பு! இவரைப் போய் அரசியலுக்கு அனுப்பிட்டாங்களே, சினிமாவுக்குப் போயிருந்தா சிவாஜி கணேசனுக்கே டஃப் கொடுத்திருப்பாரே!" என்று கூறி அவையையே சிரிக்க வைத்தார்.

தெர்மாகோல்

வைகை அணையில் தெர்மாகோல் போட்டு மூடிய விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது, "நீங்க தெர்மாகோல் போட்டதுல இருந்துதான் அறிவியல் உலகமே தலைகீழா மாறிப்போச்சு" என்று செல்லூர் ராஜுவைப் பார்த்து அவர் அடித்த கமெண்ட் இன்றும் பிரபலம்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தனக்குள்ள நெருக்கத்தைப் பல மேடைகளில் நக்கலாகப் பகிர்ந்துள்ளார். "தலைவர் (ஸ்டாலின்) இப்போ சி.எம் ஆயிட்டாரு. முன்னாடி எல்லாம் 'ஏய் இங்க வா'ன்னு கூப்பிடுவேன். இப்போ பயந்து பயந்து 'சார்'னு கூப்பிட வேண்டியதா இருக்கு. ஆனா, அவர் போனதுக்கப்புறம் அவர்கிட்ட கத்துக்கிட்டதை வெச்சு அவரே கலாய்ப்பேன்" என்று கூறி ஸ்டாலினையே சிரிக்க வைப்பார்.

ஒருமுறை ஸ்டாலின் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தபோது, "நீங்க மொபைல் பார்த்தா நான் திட்டுவேன்" என்று உரிமையுடன் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் அதிமுக கூட்டணியை அவர் விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது. "அதிமுக ஒரு தோசை மாதிரி. அதுல ஓபிஎஸ் ஒரு பக்கம், ஈபிஎஸ் ஒரு பக்கம்னு திருப்பிப் போட்டு சுடுறாங்க. ஆனா தோசை என்னவோ ஒன்னுதான், அதுல காரம் மட்டும் தான் வேற வேற" என்று உணவுடன் அரசியலை ஒப்பிட்டு நையாண்டி செய்வார்.

"அம்மா கட்சி... பொடலங்காய் கட்சி" என்று அடுக்கு மொழியில் அதிமுகவினரை அவர் வம்பிழுக்கும் பாணி தனித்துவமானது.

ஆங்கிலம் பேசும் அழகு

சட்டமன்றத்தில் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசிவிட்டு, "பாத்தீங்களா... நமக்கும் இங்கிலீஷ் வரும்" என்று பெருமையுடன் அவர் சொல்லும் ஸ்டைல் அவையில் சிரிப்பலைகளை உருவாக்கும். குறிப்பாக 'Water Resources' பற்றிப் பேசும்போது தொழில்நுட்ப வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அதிகாரிகளைப் பார்த்து நக்கலாகக் கண் சிமிட்டினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு 'அட்வைஸ்'

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசும்போது, "ஏன் தம்பி இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? பிபி ஏறிடப் போகுது. அப்புறம் உங்க டாக்டர் என்னைத் திட்டுவாரு" என்று கூறி சபையை அமைதிப்படுத்தினார். எல்லாவற்றையும் விட அவர் பேசும்போதும் மற்றவர்கள் பேசும் போதும் அவர் காட்டும் முகபாவனைகள்தான் அல்டிமேட்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+