விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்
சென்னை: தனக்கு பரிசு தர விரும்புபவர்கள் போட்டித் தேர்வுகளுக்குரிய புத்தகங்களை மட்டுமே தர வேண்டும் என அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ.
அதுவும் என்னென்ன மாதிரியான புத்தகங்களை கொடுக்கலாம் என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதோடு அந்த புத்தகங்களின் வெளியீட்டாளரிடம் பேசி மதிமுக நிர்வாகிகளுக்கு மட்டும் 40% தள்ளுபடு கூப்பனையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் அவர்.

கலிங்கப்பட்டி
மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இன்று பொறுப்பேற்கும் துரை வைகோ, செண்டிமெண்டாக தனது மூதாதையர்களின் பூர்வீக கலிங்கப்பட்டி இல்லத்திலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனிடையே அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனக்கு சால்வைகளும், பட்டாடைகளும் யாரும் போர்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், மரக்கன்றுகளும் போட்டித் தேர்வுகளுக்குரிய புத்தகங்களும் மட்டுமே தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தகங்கள் லிஸ்ட்
TNPSC -GROUP 1 EXAM, TNPSC-GROUP 4 VAO EXAMS, TN -TET, TNURSB -Sub inspector of police exam, TRB Exam, TANGEDCO -Asst Engineer, ISRO -Technical assistant, NABARD Grade A exam, NEET Competitive Exam, Guide books and notes for school students, என்ற தலைப்புகளில் உள்ள புத்தகங்களை மட்டுமே தனக்கு பரிசளிக்க விரும்புவர்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள துரைவைகோ, மேற்கண்ட புத்தகங்களை சுரா பப்ளிகேஷன் மூலம் 40% தள்ளுபடியில் வாங்கவும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஏழை மாணவர்கள்
மதிமுகவினர் தன்னிடம் வழங்கும் இது மாதிரியான புத்தகங்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை சந்தித்து வழங்கிட முடிவெடுத்துள்ளதாக துரை வைகோ தெரிவித்திருக்கிறார். தனது அன்பு வேண்டுகோளை மதிமுகவினர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ள துரை வைகோ, முன்னேற்ற அரசியலுக்கான முதற்படி, நூல் படி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மரக்கன்றுகள்
இதனிடையே திருமண விழா, புதுமனை புகுவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தாம் கலந்துகொண்டால் நாட்டு மரக்கன்றுகளை தன்னிடம் வழங்குமாறும் அநாவசிய வரவேற்பு செலவுகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். துரை வைகோவின் இந்த புதிய முயற்சி ஏழை எளிய மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications