இது புதுசா இருக்குங்க..1000 டாலர் சம்பளம்! மடகாஸ்கரில் வேலை.. ஆனால்..மதிமுக உறுப்பினரா இருக்கனும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும், கனரக டிரக் மெக்கானிக் ,நிலத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் வரை ஊதியம் இருப்பதாகவும், ஆனால் மதிமுக நிர்வாகிகளுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கே வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார் மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி தொகுதி எம்பியுமான துரை வைகோ.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோ தற்போது திருச்சி தொகுதி எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வைகோவின் மகன் என்ற அடையாளம் மட்டுமல்லாது தொண்டர்கள் உடனான அவரது நெருக்கம் கட்சியினரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

durai vaiko mdmk jobs

குறிப்பாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், இறந்து போன தொழிலாளர்கள் உடல்களை தமிழகம் கொண்டு வருவது என அவர்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றி இருக்கிறார்.

மேலும் கட்சியினருக்கு என்றால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் துரை வைகோ ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் கட்சியில் ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பு அவருக்கு தற்போது குறைந்திருக்கிறது என்று சொல்வதை விட எதிர்ப்பே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு மதிமுக உறுப்பினர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் மதிமுக உறுப்பினர்களுக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் மதிமுகவினர் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் துரை வைகோ. அதில்,"ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் விவசாயம் சார்ந்து இயங்கி வரும் ஒரு நிறுவனம் கீழே உள்ள வேலைவாய்ப்புகளுக்காக தகுதியான நபர்களை நியமிக்க உள்ளது .

இந்த நல்லதொரு வேலை வாய்ப்பை நமது கழக சகோதரர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ வாங்கி தர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். இந்த வேலைவாய்ப்பின் மூலமாக மதிமுக குடும்பங்கள் பொருளாதார அடிப்படையில் பயனடைந்தால் அதை விட வேறு மகிழ்ச்சி இல்லை.

கனரக டிரக் மெக்கானிக் ( Heavy Truck Mechanic) - சம்பளம் 900$+100$ (USD) (உணவு, இருப்பிடம் & விமான டிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு), கல்வி தகுதி - Diploma (or) ITI, கார் மெக்கானிக் ( Car Mechanic) - சம்பளம் 800$+100$(USD) ( உணவு , இருப்பிடம் & விமான டிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு), கல்வி தகுதி - Diploma ( or) ITI

பொறுப்பாளர் ( நிலம் + வேலை ஆட்கள்) ( Field In charge) - சம்பளம் 600 $ +100 $ (USD) தங்குமிடத்திற்கான தொகை + விமான டிக்கெட். கல்வி தகுதி - Any Degree ( விவசாயப்பணிகள் குறித்து தெரிந்து இருக்க வேண்டும்)

நேர்காணல் & மற்ற நடைமுறைகள் முடிந்த பின் விசா & டிக்கெட் வழங்கப்படும். குறிப்பு - இந்த மூன்று பணியிடங்களுக்கு விண்ணிப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ள தெரிந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பித்த கழக குடும்பத்தினர்களில் மேற்கண்ட அடிப்படை தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மதிமுக குடும்ப உறவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை

உங்கள் பயோடேட்டாவை கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் சகோதரர் திரு.ஆசைதம்பி அவர்களின் மின்னஞ்சலுக்கோ அல்லது அவரின் வாட்சப் எண்ணிற்க்கோ அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் [email protected]. [email protected], வாட்சப் எண்: +91 97899 83907" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+