திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு.. போட்டியின்றி தேர்வாகிறார்கள்!
சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக தொடங்கி பாஜக வரை அனைத்து கட்சிகளிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. பாஜக கட்சியில் புதிய துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய நபர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுகவில் இரண்டு முக்கிய பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

பொதுக்குழு எப்போது
இந்த இரண்டு பதவிகளுக்கான தலைவர்களை தேர்வு செய்வதற்காக செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது. முன்னாள் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவை தொடர்ந்து கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவி துரைமுருகனுக்கு கிடைக்குமா என்று கேள்வி எழுந்து வந்தது. பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்ததால் அந்த பதவியும் காலியானது.

தேர்தல் நடக்கும்
இந்த நிலையில் திமுகவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு பதவிகளுக்கும் போட்டியிடுவதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று திமுகவில் நடந்தது. மேலும் இதற்கான வேட்புமனு தாக்கல் கால அவகாசம் இன்று மாலை 4 வரை மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது.

இரண்டு பேர்
பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை இரண்டு பதவிக்கும் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இவர்கள் இருவரின் வேட்பு மனு மீது வரும் 5ம் தேதி பரிசீலனை செய்யப்படும். அதன்பின் பொதுக்குழுவில் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் திமுகவில் இவர்கள் இருவர் மட்டுமே இந்த இரண்டு பதவிக்கும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

போட்டியின்றி தேர்வு
அதனால் இவர்கள் இருவரும், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும். 1977 ஆம் ஆண்டிலிருந்து 33 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராக க. அன்பழகன் இருந்தார். தற்போது அந்த பதவிக்கு துரைமுருகன் தேர்வாக இருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications