திமுகவில் எ.வ.வேலு மகனுக்கு முக்கிய பொறுப்பு.. புதிய நிர்வாகிகள் நியமனம்.. துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைக் கழகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முக ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனை அரசியலில் தீவிரமாக களமிறக்கி உள்ளார். கம்பனுக்கு மருத்துவ அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜகண்ணப்பனுக்கு தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Duraimurugan announce appointment of Dr. Kampan as Vice President of dmk Medical Team

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தீர்மானக் குழு உறுப்பினர்களாக ஆ.நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி துணைச் செயலாளராக அன்னியூர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் இரா.இலட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்''.

இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+