மே 28-ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதைப் பற்றி பேசப்போகிறார்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 28-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மே 28-ஆம் தேதி சனிக்கிழமை மாலை கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெறும் சூழலில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.

கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது உட்கட்சித்தேர்தல் என பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.

மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர்

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில்
கூட்டம் நடைபெறும் என்றும் அது போது மாவட்டச் செயலாளர்களும்,பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெங்கய்ய நாயுடு

வெங்கய்ய நாயுடு


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே 28-ஆம் தேதி சனிக்கிழமை மாலை தான் சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து பேசுகிறார். இந்தச் சூழலில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், உட்கட்சித்
தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பலர் மீது புகார்கள்

பலர் மீது புகார்கள்

இதனிடையே 5-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது பண்டல் பண்டலாகஅவரவர் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புகார்கள் குறித்தும் அன்றைய தினமே
விசாரணையும் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு திமுக தலைமை சில அதிரடி மாற்றங்களை கட்சியில்அரங்கேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உட்கட்சித் தேர்தல்

உட்கட்சித் தேர்தல்


தற்போது திமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தலில் குழப்பம்விளைவிக்கும் நபர்களின் பட்டியல் மாவட்டம் வாரியாக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 3 கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவுக்கு
பிறகு குழப்பவாதிகளுக்கு கல்தா கொடுக்கப்பட்டு புது முகங்களுக்கு முக்கியப்பொறுப்புகள் தரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+