என் கல்லறையில் "கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்" என எழுதுங்கள்.. துரைமுருகன் உருக்கம்
சென்னை: என் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுதுங்கள், அது போதும் என தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
தமிழக சட்டசபையில் இன்று நீர் வளத்துறை மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: கேள்விக் கேட்பதும், வெட்டுத் தீர்மானங்களை தருவதும் உறுப்பினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
அதற்காக உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். 1989 ஆம் ஆண்டில் இருந்து எப்போதெல்லாம் அமைச்சராக உள்ளேனோ அப்போதெல்லாம் இந்த துறை சார்பில் நான் தான் பதில் சொல்லி வருகிறேன். நீர் வளத் துறைதான் எனக்கு வேண்டும் என முதல்வரிடம் கேட்டேன்.

பொதுப் பணி துறை
ஆனால் பொதுப் பணித் துறை என்ற பெயரில் இருக்காது என முதல்வர் சொன்னார். அதை பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் இந்த துறையில்தான் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய முடியும் என கருதுகிறவன். என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் கட்சியில் இருந்தவன், இன்னும் இருக்க போகிறவன், என்றைக்காவது ஒரு நாள் மறையப் போகிறவன். நான் மறைந்துவிட்ட அன்று எனக்காக சமாதி எழுப்பப்படும். அந்த சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என எழுதினால் போதும் என கண்கலங்கினார்.

சபாநாயகர் அப்பாவு
அப்போது சபாநாயகர் அப்பாவு, இன்னும் 100 ஆண்டுகளை கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் என சொல்ல, துரைமுருகனும் நிச்சயமாக என கூறிய துரைமுருகன் சண்டை போட்ட பிறகு ஆளுநர் டீக்கு அழைத்திருந்தார். நானும் தலைவரும் சென்றோம். அப்போது என் வயதை பற்றி கேட்டார். அதற்கு முதல்வர் எங்க அப்பாவுடன் 53 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். இப்போ என்னுடன் இருக்கிறார் என்றார்.

உதயா
பக்கத்தில் உதயா இருந்தார். அப்போது ஆளுநர் , அவருடனும் இருக்கிறார் என்றார். உடனே நான் உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறான், அவனுடனும் நான்தான் இருப்பேன் என்றேன். அப்போது உங்க வயது என்ன என்றார் ஆளுநர் நான் 80களில் இருக்கிறேன். ஆனால் நிச்சயம் 100- ஐ கடப்பேன் என்றேன். இதனையும் சொல்லிக் கொடுத்தது கருணாநிதிதான். "என்றைக்குமே தனக்கு வயது ஆகிடுச்சினு நினைக்கவே கூடாது, எப்பவும் இளமையாகவே நினைக்கணும்னு கருணாநிதி சொல்வார். எனவே நான் 100 வயது வரை நிச்சயம் இருப்பேன் கவலைப்படாதீர்கள் என்றார் துரைமுருகன்.

பாசிட்டிவாக பேசிய துரைமுருகன்
துரைமுருகனின் இந்த பாசிட்டிவான பேச்சுக்கு அவையில் பாராட்டு கிடைத்தது. இதையடுத்து அவர் திட்டங்கள் குறித்து பேச்சை தொடர்ந்தார். அவர் கூறுகையில் அத்திகடவு அவினாசி திட்டம், அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது. காவிரி குண்டாறு திட்டத்தை நாங்கள் விட்டுவிடவில்லை, விடவும் மாட்டோம். நடந்தாய் வாழி காவிரி திட்டம் நல்ல திட்டம், அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சொல்லி உத்தரவிடப்பட்டது.

ஆட்சி முடிந்தது
அத்துடன் உங்கள் ஆட்சி முடிந்துவிட்டது. ஆனால் எங்கள் ஆட்சி வந்ததும் நடந்தாய் வாழி காவிரியை நடுரோட்டில் விடவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் நீர் தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம், சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கிமயமாக்கப்படும்.

ரூ 32 கோடி
இந்த பணிகள் ரூ 32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 2 இடங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் பொருட்டு, கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் 13.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொளளப்படும். கோவை உள்பட 8 மாவட்டங்களின் 15 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ரூ 70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications