மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி திமுகவுத்தான்.. போர் முரசு கொட்டிய துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் காலில் விழுவீர்களோ, கையில் விழுவீர்களோ எனக்கு தெரியாது. எல்லோரும் பழைய தி.மு.க காரனாக மாறுங்கள்.. திமுக காரன் என்றால் சாதாரணமானவன் அல்ல. இரும்பை நரம்பாக்கிக்கொண்டவன். எஃக்கை தசையாக்கி கொண்டவன். ஊழிப்பெருவெள்ளத்தை தன் மூச்சாக்கி கொண்டு இருப்பவன். அந்த வீரனை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் காட்டியாகி வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-

Duraimurugan Claims Madurantakam and Dharapuram by-elections Victory belongs to the DMK

மன்னாதி மன்னரை தோற்கடித்த கட்சி திமுக

இன்றைக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது. ஆனால் அவருடைய சிந்தனையில் இந்த விழா இல்லை என்பது எனக்கு தெரியும். இரண்டு இடங்களில் நம்முடைய வீரர்கள் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். இரண்டு களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஏமாந்துவிட்டாலும் இனி திமுகவினரை எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியது. மன்னாதி மன்னரை எல்லாம் தோற்கடித்த கட்சி திமுக.

ஒரு காலத்தில் ராமநாதபுரம் ராஜாவை, சைக்கிள் கடை வைத்து இருந்த தங்கப்பன் என்பவரை போட்டு அண்ணா தோற்கடித்தார். புதுக்கோட்டை மன்னரை தோற்கடித்தார். பொள்ளாச்சி மகாலிங்கத்தை தோற்கடித்தார். அந்த வீரம் இன்னும் தமிழ்நாட்டில் செத்துவிடவில்லை. அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் எழுதியது போல, "ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டா பயப்படுவான்.. பயப்பட மாட்டான்.

பழைய திமுக காரனாக மாறுங்கள்

உங்களை எல்லாம் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த களம் நமக்கு ஒரு முக்கியமான களம். நம்முடைய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வீரமிக்க தமிழனாக இருக்கிறார். அவருடைய களம் அது.. அந்த களத்தில் வென்று கொண்டு இருக்கிறார். இது நம்முடைய களம்.. இந்த களத்தில் நாம் வென்றாக வேண்டும். எனவே, நீங்கள் பழைய திமுக காரனாக மாறுங்கள்.

மேடையில் பேசுவார்கள்.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு அது தெரியாது. எவனாவது கல் வீசினால் சொல்வார்கள். டேய்.. நாங்கள் வாய்க்கரிசியை வாயில் போட்டுக்கொண்டுதான் இங்கே உட்கார்ந்து இருக்கிறோம் என்பார்கள். வாய்க்கரிசியை வாயில் போட்டு விட்டு வந்த கட்சி திமுக. அந்த பரம்பரையாக கோழையாக இருக்கும். திமுக காரன் என்றால் சாதாரணமானவன் அல்ல.

இரும்பை நரம்பாக்கிக்கொண்டவன்

இரும்பை நரம்பாக்கிக்கொண்டவன். எக்கை தசையாக்கி கொண்டவன். ஊழிப்பெருவெள்ளத்தை தன் மூச்சாக்கி கொண்டு இருப்பவன். அந்த வீரனை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் காட்டியாகி வேண்டும். இதுக்கு என்ன செய்வீர்களோ தெரியாது. போங்கள்.. காலில் விழுவீர்களோ..கையில் விழுவீர்களோ தெரியாது. வெற்றியை கொண்டு வருவதுதான் முக்கியம்.. என்று ஆவேசமாக பேசினார்.

தவெகவிற்கு பாடம் புகட்ட வியூகம்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தவெக, திமுக, அதிமுகம், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த தவெக, தனது 4 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பாக இந்த தேர்தல் இருக்கும் என கருதுவதால் இரண்டு தொகுதிகளையும் எப்படியாவது வென்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

அதேபோல, திமுகவும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பதிலடி கொடுத்து, தவெகவிற்கு பாடம் புகட்ட வியூகம் வகுத்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை தனது எம்.எல்.ஏக்களை தவெக இழுத்துசென்றதால், மீண்டும் வெற்றியை பெற்று இரண்டு தொகுதிகளிலும் தனது செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இடைத்தேர்தல் என்றாலும் கடுமையான போட்டி நிலவுவதால், இந்த தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+