'அடடா.. அட.. அட.. என்னா பேச்சு என்னா பேச்சு'! விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர்! கலாய்த்த துரைமுருகன்!
சென்னை: 'அடடா.. அட.. அட.. என்னா பேச்சு என்னா பேச்சு' என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை சட்டசபையில் வைத்து கலாய்த்துவிட்டார் மூத்த அமைச்சரான துரைமுருகன்.
மேலும், பேசுவதில் விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர் என்றும் பாராட்டு சர்டிஃபிகேட் கொடுத்தார் துரைமுருகன்.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும் மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது போலவும் பேசுவது ரொம்ப ஓவர் என பதிலடி கொடுத்தார் துரைமுருகன்.

சி.விஜயபாஸ்கர் கேள்வி
தமிழக சட்டசபையில் காவிரி குண்டாறு இனைப்புத் திட்டம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஏக்கத்தோடு இந்த திட்டம் குறித்து பேசுவதாக பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'அடடா.. அட.. அட.. என்னா பேச்சு என்னா பேச்சு' , பேசுவதில் விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர, நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது வேகமான பேச்சை கேட்பதில் மகிழ்ச்சி என கலாய்த்தார். இதற்கு ஏதோ அதிமுக உறுப்பினர்கள் பக்கம் சலசலப்பு எழுந்ததால் துரைமுருகன் சூடானார்.

துரைமுருகன் பதில்
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும் மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது போலவும் பேசுவது ரொம்ப ஓவர் என பதிலடி கொடுத்தார் துரைமுருகன். மேலும், அது குறித்து துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு குறித்து ஏதோ சொல்ல, நம்ம ஸ்பீக்கர் எதுவா இருந்தாலும் அவா ஊரையும் கொண்டு வருவார் என நகைச்சுவையாக பேசினார் துரைமுருகன்.

கால்வாய் வெட்டும் பணிகள்
கால்வாய் வெட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் முடிக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு நீண்டதொரு பதிலை வரலாற்றுத் தகவல்களோடும், புள்ளி விவரங்களோடும் எடுத்துரைத்துள்ளார்.

முதல்வர் இல்லை
முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள நிலையில் அவை முன்னவரான துரைமுருகன் பேரவை நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications