"கட்டிருவாங்களா அணையை?"..டெல்லி கிளம்பும் துரைமுருகன்.. கவனிக்கும் சிவக்குமார்.."காவிரி" யில் புயல்
சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று, காவிரி மேலாண்மை அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் முறையிட அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.
மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக இருந்து வருகிறது.. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

வீண் முயற்சி: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும், அரசியலுக்காக இதுபோன்று பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க வேண்டாம், ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கு தமிழகமே எதிர்த்து நிற்கும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், இதை கர்நாடகா அரசு மதித்து செயல்பட வேண்டும், தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்வதாக தகவல் வெளியானது..
துரைமுருகன்: செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியபோது, "காவிரி நிர்வாகத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. ஆகவே அவர்கள் நிலைமை என்ன? நீர்நிலை என்ன? என்பது கூறித்து எனக்கு தெரியாது. இருந்தாலும் நாங்கள் கர்நாடகத்தில் சென்று பேச முடியாது அப்படி பேசுவது சட்டப்படி தவறு. அதனால், நான் முதலமைச்சரை சந்தித்த பிறகு நானே டெல்லி சென்று காவிரி நீர் மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திப்பேன்.
நாங்கள் பின் வாங்கமாட்டோம், கட்டிவிடுவோம் என்று அரசியலில் வீரமாக பேசலாம்.. ஆனால் எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாடு அதை அனுமதிக்காது.. சட்டப்படியும் அது முடியாது. அப்படி எடுக்கவே முடியாது, வேணுமானால் சும்மா பேசிட்டு இருக்கலாம்.. அவர்கள் ஏதோ பெரிசாக செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறீங்க.. அதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட்.. வேறெதுவும் செய்ய முடியாது.
நாம இருவரும் அண்டை மாநிலங்கள்.. ஏராளமான தமிழர்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் இரண்டு அரசுகளின் போக்கு அதை நாங்கள் உணருகிறோம்:" என்று கூறியிருந்தார்.
ஆலோசனை: இதையடுத்து, நேற்றைய தினம், மேகதாது அணை விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் முறையிடுவதற்காகவே டெல்லி செல்கிறார்.. மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்த போகிறார்.. அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளார்.
எதிர்பார்ப்பு: மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவை அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன..
ஏற்கனவே, மேகதாது அணையை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் சந்தித்திருக்கும் நிலையில், துரைமுருகனும் கிளம்பி டெல்லி செல்வதும், காவிரி மேலாண்மை அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்வுகளை கர்நாடகாவும் உற்று கவனித்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications