நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்! பரபரக்கும் திருச்சி! ஜூலை 26ல் டெல்டா மண்டல பூத் கமிட்டி கூட்டம்!
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ஜூலை 26ஆம் தேதி திருச்சியில் டெல்டா மண்டல பூத் கமிட்டி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும்
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, மாநிலம் முழுக்க கழக மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 26-07-2023 (புதன்கிழமை) அன்று திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் என்ற இடத்தில், முதலமைச்சர், கழகத் தலைவர் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.
டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 15 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.''
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. கடலூர் கிழக்கு
4. கடலூர் மேற்கு
5. மயிலாடுதுறை
6. நாகப்பட்டினம்
7. திருவாரூர்
8. தஞ்சாவூர் வடக்கு
9. தஞ்சாவூர் மத்திய
10. தஞ்சாவூர் தெற்கு
11. திருச்சிராப்பள்ளி தெற்கு
12. திருச்சிராப்பள்ளி மத்திய
13. திருச்சிராப்பள்ளி வடக்கு
14. புதுக்கோட்டை தெற்கு
15. புதுக்கோட்டை வடக்கு
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications