கொங்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்! செப்.24ல் காங்கேயத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 24 ஆம் தேதி காங்கேயத்தில் கொங்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
கழகத் தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்" நடத்திட முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் இராமநாதபுரத்தில் முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 24-09-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர், கழகத் தலைவர் சிறப்புரையாற்ற உள்ளார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள்,தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1. திருப்பூர் வடக்கு
2. திருப்பூர் தெற்கு
3. சேலம் கிழக்கு
4. சேலம் மேற்கு
5. சேலம் மத்திய
6. ஈரோடு வடக்கு
7. ஈரோடு தெற்கு
8. கரூர்
9. கோவை மாநகர்
10. கோவை வடக்கு
11.கோவை தெற்கு
12.நாமக்கல் கிழக்கு
13.நாமக்கல் மேற்கு
14.நீலகிரி
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications