திமுக உறுப்பினர் கட்டணம் ரூ.10 மட்டுமே! கட்சியில் சேர என்னென்ன விதிமுறைகள் தெரியுமா? -துரைமுருகன்
சென்னை: பூர்த்தி செய்யப்பட்ட திமுக உறுப்பினர் படிவங்களை மொத்தமாக சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
இதனிடையே திமுகவில் சேர என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

1. உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.
2. உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25.
3. உறுப்பினருக்கான கட்டண தொகையை மணியார்டர், டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) மூலம் அனுப்புகின்றவர்கள் அந்த கட்டணத் தொகை விவரத்தையும் மணியார்டர் ரசீது அல்லது டி.டி. எண்ணையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டத்திற்குள் குறித்து அனுப்ப வேண்டும்.
4.விதி 5, பிரிவு 5-ன்படி உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.
5.உறுப்பினராக சேர விரும்புவோர், உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண்., புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை மட்டும் நகல் (ஜெராக்ஸ்) எடுத்து இணைத்திட வேண்டும்.
6.விதி 5, பிரிவு 3-ன்படி உறுப்பினர் பதிவுத்தாளில் சம்பந்தப்பட்ட வார்டு கிளையின் நிர்வாகிகள், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மேலமைப்பு நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட கழக, மாநகர் மாவட்ட கழக, மாநகர கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், அந்தந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் கையொப்பமிட்டு உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களில் பரிந்துரை செய்யும் தகுதி பெற்றவராவர்.
7. உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்தவுடன் காலம் தாழ்த்தாமல், மொத்தமாக சேர்த்து வைக்காமல், உடனுக்குடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
8. உறுப்பினர் விண்ணப்ப படிவங்களையும், அதற்குரிய கட்டணத் தொகையினையும் "பொதுச்செயலாளர், தி.மு.க. தலைமை நிலையம், அண்ணா அறிவாலயம், 367 & 369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018" என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
9. உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டணத் தொகை தலைமைக்கழகத்திற்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications