துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்!
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் வரப்போகின்றன என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுவாரா?, கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா?, மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் கட்சிக்குள்ளும் வெளியிலும் அதிமுகமாக கேட்கப்படுகின்றனர். இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்கின்றனர் திமுகவினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்தக் குழுக்கள் தமிழகம், முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் கருத்துகளை சேகரித்தன.

அதேபோல், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளம் மூலமாகவும் கருத்துக்கள் பெறப்பட்டன. தற்போது அந்த அறிக்கைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக
இதையடுத்து கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகனை மாற்றிவிட்டு புதிய நபரை நியமிக்கலாம் என்ற பேச்சு அதிகமாக பேசப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோரே கட்சியின் உயர்மட்ட நிர்வாகமாக கருதப்படுகின்றனர். இதில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை பொதுக்குழுவே தேர்வு செய்கிறது.
துரைமுருகன்
இந்த நிலையில், தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு பதிலாக புதிய நபரை நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. சில வட்டாரங்களில் ஆ.ராசாவின் பெயரும் பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிக்கும்போது, உடனடி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், துரைமுருகன் இன்னும் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில்கூட வழக்கம்போல் அறிவாலயத்திற்கு வந்து தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதுடன், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
அவரது உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியான நிலையில், தன்னைப் பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களைப் பற்றிய முடிவுகளை மு.க.ஸ்டாலின் அவசரமாக எடுப்பதில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே பொதுச்செயலாளர் மாற்றம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
கனிமொழி
இதேபோல், கனிமொழிக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காரணம், செயல் தலைவர் என்ற பதவி திமுகவில் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் மட்டுமே உருவாக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மாவட்டச் செயலாளர்கள்
தற்போது தலைவர் மு.க.ஸ்டாலின் முழுமையாக கட்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், செயல் தலைவர் பதவியை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கட்சிக்குள் கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு அறிக்கைகளில் பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவிகளில் மாற்றங்கள்
சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றும், மக்களுடன் தொடர்பு குறைந்திருந்ததாகவும் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவுகிறது. மேலும், தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
கள ஆய்வுக் குழு
எனினும், இந்த விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கள ஆய்வுக் குழுவின் அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுப்பார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் வருமா? அல்லது சில நிர்வாக மாற்றங்களோடு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு வரும் வாரங்களில்தான் பதில் கிடைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications