Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஓல்டு ஸ்டூடண்ட்..' ரஜினிகாந்த் பேச்சு vs துரைமுருகன் 'தக் லைஃப்'.. இரண்டு பேரும் பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகன் குறித்து தமாசாக பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பல் விழுந்தவர்கள் நடிக்கிறார்கள் என்று தனக்கே உரிய பாணியில் ரஜினிக்கு தக் லைஃப் கொடுத்து பேசியுள்ளார். இருவரும் பேசியது என்ன? என்பது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

பழைய மாணவர்களை சமாளிப்பது சாதரணமானது இல்லை என ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு பேசினார். அமைச்சர் எ.வ வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இவ்வாறு பேசியிருந்தார். முதல்வர் முக ஸ்டாலினின் முன்னிலையில் ரஜினி இவ்வாறு பேசியது மொத்த அரங்கமும் சிரிப்பலையில் குலுங்கியது. ரஜினிகாந்தின் இந்த பேச்சு வலைத்தளங்களிலும் அதிகம் பரவியது.

Minister Duraimurugan rajnikanth stalin

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம், ரஜினிகாந்தின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு தனக்கே உரிய பாணியில் 'தக் லைஃப்' செய்து இருக்கிறார் துரைமுருகன்.. ரஜினிகாந்த் பேச்சின் முழு விவரத்தையும் அதற்கு துரைமுருகன் கொடுத்த பதிலையும் இங்கே விரிவாக பார்க்கலாம்..

ரஜினிகாந்த் பேசியதாவது:

கலைஞர் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாடிய விதம் சிறப்பானது. உலகிலேயே இதுபோன்று எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் நூற்றாண்டு விழா கொண்டாட மாட்டார்கள், கொண்டாட போவதும் கிடையாது.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் கிடையாது என்று அமைச்சர் எவவேலு என்னிடம் தெரிவித்தார். கருணாநிதி என்றால் சினிமா, இலக்கியம், அரசியல்தான். அவரிடம் சினிமா தொடர்பாக அதிகம் பேசி உள்ளேன். அவருடைய இலக்கியம், கவிதைகளை நான் அதிகம் படித்தது கிடையாது. அதன்பிறகு, அரசியல்தான் உள்ளது. அதை நான் இங்கு பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

Minister Duraimurugan rajnikanth stalin

ஓல்டு ஸ்டூடண்ட்: ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல 'ரேங்க்' வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள். கருணாநிதியுடன் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா?

துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. இதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்" என்று கூறினார்.

துரைமுருகன் பேசியதாவது:-

ஓல்டு ஸ்டூடண்ட், துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டி ஆட்டியவர். என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் எவ வேலு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

பல் விழுந்த போதிலும்: சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், "ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், "பல்லு விழுந்த நடிகர்கள்" என தனக்கே உரிய பாணியில், ரஜினிக்கு தக் லைஃப் கொடுத்து பேசியது இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+