திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன்.. உடல்நிலை எப்படி இருக்கு?
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். சளி, காய்ச்சல் பாதிப்பால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு வயது மூப்பின் காரணமாக, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால், அவர் மருத்துவமனை சென்று அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு, திடீர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமைச்சர் துரைமுருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு உரிய சிகிச்சை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமவனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும், அங்கிருந்த மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
தற்போது, சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு வயது 89. 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் போராட்டத்தில் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் துரைமுருகன் தான் அதிக முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு தமிழக அரசு சார்பில் 'பேரறிஞர் அண்ணா விருது' வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications