"சார் அதிமுகவில் உள்கட்சி பூசல்.." அப்படியா தெரியாதே எனக்கு.. அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு
சென்னை: அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை நடக்கிறதே அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு அமைச்சர துரைமுருகன் கலகலப்பான பதிலை அளித்தார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி பொதுக் குழு கூட்டங்களிலும் சரி நகைச்சுவையாக பேசுவதில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அசந்து போவது போல் ஒரு பதிலை அளிப்பார்.
ஆனால் அந்த பதில் நகைச்சுவையாக இருக்கும். சட்டசபையிலும் சரி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கும் சில நேரங்களில் நகைச்சுவையாக பதில் அளிப்பது அவர் வாடிக்கையாகும்.

துரைமுருகன்
அவரை போல் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். அவரது உடல்மொழியிலும் அத்தனை நகைச்சுவை இருக்கும். கட்நத 2018ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன பேசும் போது சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடித்திருகக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். சிவாஜி கணேசன்போல் ஆகியிருப்பேன் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கொரோனா
கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டசபையில் கொரோனா குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்த விவாதத்தின் போது துரைமுருகன், எங்கு பார்த்தாலும் கொரோனா பயமாக இருக்கிறது. போன் எடுத்தால் இருமி கொரோனா என்கிறார்கள். நீங்கள் (முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி) ஒன்றும் இல்லை என சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே. ஏசியில் இருந்தால் கொரோனா பரவும் என்ற பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்கள் எல்லாம் புள்ள குட்டிக்காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆச்சுன்னஆ இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம் என கூறியது அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.

குஷ்புவுக்கு கோயில்
பின்னர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் எம்ஜிஆருக்கு தனிநபர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார்கள். அதற்கு துரைமுருகன், குஷ்புவுக்கு கோயில் கட்டினாங்க, அதுக்கு இது பரவாயில்லை என கூறி கொள்ளென சிரித்தார். இவ்வாறு துரைமுருகன் இருக்கும் இடத்தில் சிரிப்பு சப்தமாக இருக்கும் என்பார்கள்.

அப்படியா தெரியாதே எனக்கு
அந்த வகையில் இன்றைய தினம் அவரிடம் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகமாக இருக்கு. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன் "அப்படியா, தெரியாதே எனக்கு" என கூறி சிரித்துக் கொண்டே சென்றார். அவரது கூறியதை விட அவரது முகபாவனைகள் சிரிப்பை வரழைத்தன.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications