சட்டசபையில் ஒரு சூப்பர்ஸ்டார்.. ஸ்டாலின் புகழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் சிந்திய துரைமுருகன்!
சென்னை: திமுக பொதுக் குழுவில் தன்னை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்ததால் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆனந்த கண்ணீர் விட்டார். இதை பார்த்த அவரது மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்தும் கண்ணீர் சிந்தினார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் கடந்த ஆண்டு மறைந்தார். இதையடுத்து அப்பதவி காலியாக இருந்து வந்தது. இந்த பதவிக்கு துரைமுருகன் உள்ளிட்டோர் போட்டியிட முடிவு செய்தனர்.
காலியாக இருந்த பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு உள்ளிட்டோர் போட்டி போட்டனர். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மேற்கண்ட பதவிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

போட்டியின்றி தேர்வு
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் திமுக பொருளாளர் பதவிக்கு டி ஆர் பாலும் வேட்புமனு தாக்கல் செய்த போதே போட்டியின்றி தேர்வாகிவிட்டனர். இந்த நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்று அண்ணா அறிவாலயத்தில் பொதுக் குழு கூடியது.

8 மாதங்கள்
அதில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் திமுக பொருளாளராக டி ஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் திமுக இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக அமரும். இந்தி திணிப்பவர்களை நாம் ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறோம்.

சூப்பர் ஸ்டார்
விரைவில் சட்டசபை தேர்தல் வரும். அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் தலைவராக இருக்கும் போது துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனது எனக்கு மகிழ்ச்சி. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். 9 முறை சட்டசபைக்கு தேர்வான துரைமுருகன் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

கண்ணீர்
பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என்றார். தன்னை பற்றி ஸ்டாலின் பேச பேச துரைமுருகனால் அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டார். இவரை பார்த்த அவரது மகன் கதிர் ஆனந்தும் கண்ணீர் சிந்தினார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications