முருகா காப்பாத்து.. பழனி கோவிலுக்கு அடுத்தடுத்து சென்ற துர்கா ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Premalatha vijayakanth at palani |விஜயகாந்த் விரைவில் பழைய கம்பீரத்துடன் வருவார்-பிரேமலதா விஜயகாந்த்

    சென்னை: "முருகா.. காப்பாத்து" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மனைவியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் பழனி முருகனை தரிசித்து விட்டு வந்துள்ளனர்.

    முக ஸ்டாலின் மனைவி துர்காவாகட்டும், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவாகட்டும்.. இருவருக்குமே அடிப்படையில் கடவுள் நம்பிக்கை அதிகம். நிறைய கோயில்களுக்கு செல்வார்கள்.

    durga stalin and premalatha vijayakanth visits palani murugan temple

    கட்சி கொள்கை, சித்தாந்தங்களை தாண்டி, இது தனிப்பட்ட அவரவரின் நம்பிக்கை ஆகும். அந்த வகையில், வீட்டில் எந்த நல்ல காரியங்கள் நிகழ்ந்தாலும் இவர்கள் கடவுளை நாடுவது வழக்கமான ஒன்றுதான்.

    இப்போது கந்தசஷ்டியை முன்னிட்டு, துர்கா ஸ்டாலின் பழனி மலைக்கு வந்திருந்தார். பழனி முருகனை தரிசிக்க விஞ்சு மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றார். அங்கு சாயரட்சை பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பழனி மூலவரான நவபாஷான முருகனை தரிசனம் செய்தார்.

    durga stalin and premalatha vijayakanth visits palani murugan temple

    பிறகு, குடும்பத்தாரின் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்தார். எல்லாம் முடிந்தபிறகு, மலைக் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து தியானம் செய்துவிட்டு, அதன்பிறகு மலைக்கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    durga stalin and premalatha vijayakanth visits palani murugan temple

    அதேபோல, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து பழனி முருகனை தரிசிப்பதற்காக பழனி கோவிலுக்கு வந்தார். தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேப்டன் விரைவில் பழைய கம்பீரத்துடன் வருவார் கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன். அதன்படி பழனி கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்தேன்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+