இல.கணேசன் இல்லத்துக்கு சென்ற துர்கா ஸ்டாலின்! முதல்வர் டெல்லி சென்ற நிலையில் நேரில் சென்று வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சதாபிஷேக விழாவில் பங்கேற்று வாழ்த்தியுள்ளார்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று தனது 80 ஆவது பிறந்தநாளான சதாபிஷேக விழாவை கொண்டாடுகிறார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், உறவினர்கள் நேரில் சென்று இல.கணேசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சதாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த மே 19 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்று இல.கணேசன் சகோதரர் மகள் காயத்திரி சத்யநாராயணன் தனது கணவருடன் 80ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி இருந்தார். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் அழைப்பிதழை வழங்கி இருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றதால், தொலைபேசி வாயிலாக இல.கணேசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதேசமயம், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications