ஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. "பாப்புலர்" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா!
பிரபல ஜோதிடரை துர்கா ஸ்டாலின் சந்தித்து பேசிய போட்டோக்கள் வைரலாகின்றன
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்து ஜோதிடம் பார்த்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்.
அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும்.

விளக்கம்
இதற்கு ஸ்டாலின் "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்" என்று பலமுறை விளக்கம் அளித்துள்ளார்.

ராஜாத்தி அம்மாள்
சமீபத்தில்கூட அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலின், காஞ்சிபுரம் சென்றுவந்தார். நேற்று மறைந்த கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் அத்திவரதரை தரிசிக்க சென்றார். கருணாநிதி குடும்பத்தில் 2 பேர் அடுத்தடுத்து கோயில்களுக்கு சென்றது கூட பரபரப்பாக பேசப்பட்டது.

பாலாஜி ஹாசன்
இந்நிலையில்தான், துர்கா ஜோதிடரை சந்தித்து பேசும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அகில இந்திய ஃபேமஸ் ஜோதிடர் பாலாஜி ஹாசனைதான் துர்கா சந்தித்து பேசி உள்ளார். இவர், ஜோதிடர்களுக்கான மாநாடுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றவர். ஜெகன்மோகன் அரியாசனம் ஏறுவார் என்றார்.. மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார், உலக கோப்பையில் இந்தியா நூலிழையில் கோப்பையை தவற விடும் என்றார்.. இப்படி மொத்த விஷயத்தையும் ஏற்கனவே புட்டு புட்டு வைத்தவர்.

புகைப்படங்கள்
இவர் சொல்லி வரும் விஷயங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அப்படியே நடந்து வருவதால் எல்லாரும் ஷாக் ஆகி போனார்கள். இவரைதான் துர்கா வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிலுள்ளவர்களின் ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்லி உள்ளார். அதற்கு அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று அடித்து சொன்னாராம் பாலாஜி. துர்காவும், ஜோதிடரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யதார்த்தம்
ஊருக்கே பகுத்தறிவு பாடம் எடுக்கும் ஒரு குடும்பத்தில் இருப்பவருக்கு எட்டாதா அந்த பாடம் என்று பொத்தாம் பொதுவாக திராவிடர் கழக குடும்பங்களை சிலர் விமர்சித்து வருவது இயல்பு. ஆனால் பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் ஒருபோதும் வருவது கிடையாது என்பதுதான் வாழ்வின் யதார்த்தம். இது கருணாநிதி குடும்பத்துக்கும் பொருந்தும்!
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications