360 டிகிரி சுழன்ற ஹேவார்டு ஜெட்! "அங்க பாருங்க" வானத்தை நோக்கி கை காட்டிய துர்கா! வியந்த ஸ்டாலின்
சென்னை: சென்னை விமான படை சாகச நிகழ்ச்சியில் ஹாவார்டு விமானத்தின் சாகசத்தை பார்த்து பூரித்து போன துர்கா ஸ்டாலின், தனது கணவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அழைத்து வானை நோக்கி காண்பித்தார்.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணத்தையும் பொதுமக்களிடம் பெறவில்லை. இதை காண எந்த டிக்கெட்டும் கிடையாது. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டென்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்கிறது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இருக்கின்றன.
முதலில் பாராசூட் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருவோர் குடை, தண்ணீர் பாட்டில், தேவையான உணவு ஆகியவற்றை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த சாகச நிகழ்ச்சியின் போது சுகோய் விமானங்கள், சூர்யகிரண் உள்ளிட்ட விமானங்கள் வானில் தீபாவளி பட்டாசு போல் நெருப்பை கக்கிக் கொண்டு சென்றன. சுகோய் விமானங்கள் இதய வடிவத்தை வானில் போட்டது. அது போல் இரு விமானங்கள் ஹைஃபை கொடுத்தனர்.
மேலும் ஹேவார்டு ரக விமானங்களும் வானில் பறந்தன. இந்த விமானம் பாரம்பரியமானது. இது பல்லவா குழுமத்தை சேர்ந்த விமானம் ஆகும். 1947 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் சிறப்பான சேவையாற்றியது. இந்த விமானம் 360 டிகிரிக்கு சுழன்று சுழன்று அடித்தது.
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை என ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தார்கள். அத்தனை பழமையான விமானம் ஒரு பிசிறு தட்டாமல் வானில் சாகசம் செய்ததுடன் பொதுமக்களின் அருகே சென்று விமானி ஹைய் என சொன்னார்.
இந்த நிகழ்வுகளை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது துர்கா ஸ்டாலின், தனது கணவரும் முதல்வருமான ஸ்டாலினை அழைத்து வானில் பார்க்க சொன்னார். அவரும் வானை பார்த்து கை தட்டி மகிழ்ந்தார்.












Click it and Unblock the Notifications