புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! திருமாவளவன் வந்ததுமே துர்கா ஸ்டாலின் செய்த செயல்! பூரித்த விசிகவினர்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பார்த்து முதல்வர் ஸ்டாலின் மனைவி செய்த செயல் வைரலாகி வருகிறது.
தமிழக அமைச்சரவையில் நேற்றைய தினம் பெரிய அளவில் மாற்றங்களை செய்துள்ளார். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அது போல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழா நேற்றைய தினம் ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் 34 அமைச்சர்களில் 32 அமைச்சர்கள் (புதியவர்களுடன் சேர்த்து) கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பதவிப்பிரமாணத்தையும் ரகசிய காப்பையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிலையில் இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் கூட்டணி கட்சியினர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், ஜவாஹிருல்லா, வைகோ, மக்கள் நீதி மய்யம் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமாவளவன் அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது முன்வரிசையில் துர்கா ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
அப்போது துர்கா ஸ்டாலின், திருமாவளவனை பார்த்ததும் எழுந்து சிரித்தபடியே வாங்க, வணக்கம் என்றார். பதிலுக்கு திருமாவளவனும் வணக்கம் வைத்துவிட்டு பின்னால் இருந்த அமைச்சர்களை நோக்கி சென்றார். அப்போது நீலகிரி எம்பி ஆ.ராசா, தான் அமர்ந்திருந்த இருக்கையை திருமாவளவனுக்கு விட்டுக் கொடுத்தார். இதை பார்த்த விசிகவினர் பூரித்து போனார்கள்.

முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, அவருடைய மகள், உள்ளிட்டோருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. அது போல் பின் வரிசையில் கூட்டணி கட்சி தலைவர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் ஆ ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த துணை முதல்வர் உதயநிதி, வாசல் வரை சென்று வரவேற்று அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications