வடிவுடையம்மன் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை.. ஆதிபுரீஸ்வரரை வெள்ளிக் கவசமின்றி தரிசனம்
சென்னை: வடிவுடை அம்மன் கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். அப்போது ஆதிபுரீஸ்வரரை வெள்ளிக் கவசமின்றி தரிசனம் செய்தார்.
Recommended Video
தொண்டை மண்டல என்று சொல்லப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் சிவதலங்கள் 32 திருத்தலங்கள் அமைந்துள்ளன.
அவற்றில் ஒன்றான பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் படம்பக்கநாதர் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். பிரளய காலத்திற்கு பின்பு ஏற்பட்ட முதல் சுயம்பு லிங்கம் என்பதால் இந்த கோயிலுக்கு ஆதிபுரீஸ்வரர் என பெயரிடப்பட்டது.

வாசுகி பாம்பு
வாசுகி என்ற பாம்புக்கு அருள்புரிய வேண்டி புற்று வடிவில் எழுந்தருளி, வாசுகி பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால். படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால் அரவது திருமேனி ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

கார்த்திகை மாதம் பவுர்ணமி
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு தியாகராஜசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவசம் திறப்பு
கோயில் உதவி ஆணையர் கே.சித்திராதேவி தலைமையில் நடைபெற்ற கவசம் திறப்பு நிகழ்ச்சியில் மழை காரணமாக முதல் நாளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சனிக்கிழமை இன்று மழை குறைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று ஆதிபுரீஸ்வரர் தரிசனம் செய்தனர்.

ஸ்டாலின் மனைவி துர்கா
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தந்தார். அறநிலையத் துறையினர் வரவேற்று அழைத்துச் சென்று ஆதிபுரீஸ்வரர் தரிசனம் செய்தபின் வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதன் அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

துர்கா தவறாமல் தரிசனம்
வருடத்திற்கு ஒரு முறை கவசமின்றி காட்சி தரும் ஆதிபுரீஸ்வரரை துர்கா ஸ்டாலின் வருடா வருடம், தவறாமல் தரிசனம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. வெள்ளிக் கவசமின்றி காட்சியளிக்கப்பட்ட ஆதிபுரீஸ்வரருக்கு அர்த்த ஜாம பூஜை நடத்தப்பட்டு பின்னர் மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications