வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து குவிப்பு.. லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வில் கண்டுபிடிப்பு
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, தமிழ்மொழி மற்றும் கலாசாரம், சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்த கே சி வீரமணி 2016- 2021 வரை வணிக வரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 90 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு அளித்துள்ளனர்.

கேசி வீரமணியின் வீட்டில் ரெய்டு
அதன்படி இன்றைய தினம் அதிகாலை முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணியின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வந்தனர். பின்னர் தங்களது அடையாள அட்டையை காட்டி அங்கு சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 6.30 மணி முதல் திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இடையாம்பட்டி வீடு
சோதனை நடந்த போது கே.சி. வீரமணி அவரது ஜோலார்பேட்டை இடையாம்பட்டியில் உள்ள வீட்டில்தான் இருந்துள்ளார். வீரமணியின் உறவினர்கள், நண்பர்கள் என சோதனை நீடித்து வருகிறது. வேலூரி சத்துவாச்சாரியில் வசந்தம் நகரில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

ஒன்றிய செயலாளர்
அது போல் மல்லகுண்டா கிராமத்தை சேர்ந்த நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் ராஜா, ஜோலார்பேட்ட ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலராக இருந்த காமராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. வீரமணியின் நண்பர் லக்கி ரமேஷ் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னையில் சூளைமேடு, கொளத்தூர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனையானது நடைபெறுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறை
2016-2021ஆம் ஆண்டு காலத்தை வருமானம் சரிபார்ப்பு காலமாக எடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். 2016- 2021 ஆம் ஆண்டு வரை வீரமணியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ 30.61 கோடியாக இருந்தது. அதே காலகட்டத்தில் ரூ 1.83 கோடி டெபாசிட் செய்துள்ளார். 2016- 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ரூ 28.78 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

வருமானம் 4 கோடி
2016 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 25 கோடியாக இருந்துள்ளது. அவரது வருமானம் 4 கோடியாகவும் செலவு ரூ 2 கோடியாகவும் இருந்துள்ளது. மேலும் 2021 -ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 56 கோடியாக உயர்ந்துள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் மூலம் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications