AI போலி புத்தக குற்றச்சாட்டு! 'அகல்விளக்கு' பதிப்பக உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்களை கொண்ட புத்தகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த புத்தகங்களை பிரசுரித்த 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் மற்றும் பதிப்பகம் தொடர்புடைய 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியிருக்கின்றனர்.

DVAC Raids Residence of Agalvilakku Publisher Mohan

என்ன பிரச்சனை?

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கோவையில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கின. இப்பணிகள் தற்போது நிறைவடைந்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் அறிவுலகத்தை திறந்து வைத்திருந்தார். ஆனால், அறிவுலக நூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வந்திருந்தார்.

அகல் விளக்கு பதிப்பகத்தின் மூலம் பிரசுரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் போலியான தகவல்களால், AI மூலம் எழுதப்பட்டிருந்தது. இதன் எழுத்தாளர்களும் போலியானவர்கள் என்று பெருமாள் முருகன் சந்தேகம் கிளப்பியிருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி கொடுத்தது. அதன்படி தற்போது முதல்கட்டமாக அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் வீட்டிலும், பதிப்பகத்திற்கு தொடர்புடைய 7 இடங்களிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளர் மோகன் மற்றும் இம்மோசடியில் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பதிப்பகத்திற்கு சொந்தமான ரூ.22 லட்சம் கொண்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இதற்காக அரசின் முன் அனுமதி வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+