குடும்ப அரசியலை விமர்சிக்கும் மோடி! பாஜகவில் வாரிசுகளின் ராஜ்ஜியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிலுள்ள வாரிசுகளின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி 'சவுக்கிதார்' என்று தன்னை அழைக்கும்படி சொன்னார்.

Dynastic Succession politics in BJP

அதனையொட்டி அவரது கட்சியினர் அனைவரும் அன்றைக்கு இருந்த ட்விட்டர் கணக்கில் தங்களது பெயருக்குப் பின்னால் சவுக்கிதார் எனச் சேர்த்துக் கொண்டனர். அப்படி என்றால், காவல்காரன் என்று அர்த்தம் சொல்லப்பட்டது.

இப்போது அதே யுக்தியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் மோடி. பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் லாலு பிரசாத்யாவ், பிரதமர் மோடிக்கு குடும்பமே இல்லை என்று விமர்சித்திருந்தார்.

அதற்குப் பதிலடி தரும் வகையில் இப்போது பாஜகவினர் அனைவரும் எக்ஸ் தளத்தில் 'மோடியின் குடும்பம்' என்று தங்களின் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொண்டுள்ளனர்.

Dynastic Succession politics in BJP

பாஜக தொடர்ந்து 'குடும்பம்' அல்லது 'வாரிசு' என்ற இரண்டு வார்த்தைகளை முன்வைத்துத் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.

'கும்பம்' என்று சொல்லும்போது அது காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாகவும், 'வாரிசு' என்று பாஜக குறிப்பிடும்போது அது திமுக உட்படப் பல மாநிலங்களில் உள்ள வாரிசு அரசியலைக் குறிப்பிடுவதாகவுமே இருந்து வருகிறது.

Dynastic Succession politics in BJP

வாரிசு அரசியல் பற்றி அதிகம் விமர்சிக்கும் பாஜக, உண்மையில் வாரிசு அரசியலுக்கு எதிராக இருந்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி. அதற்கு IndiaSpend தரவுகள் சில விளக்கங்களை முன்வைத்துள்ளது.

அதாவது வாரிசு அரசியலில் காங்கிரசுக்குச் சளைத்ததல்ல பாஜக என்று சில ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது IndiaSpend தரவுகள். காங்கிரஸ் கட்சியில் சுமார் 36 வாரிசுகள் எம்பி ஆக இருந்தால், பாஜகவில் 31 வாரிசுகள் உள்ளனர் என விளக்கமளித்துள்ளது. கடந்த 1999லிருந்து இந்த இரண்டு கட்சிகளின் நிலைமையும் ஒரே மாதிரிதான் உள்ளது என்று IndiaSpend சொல்கிறது.

Dynastic Succession politics in BJP

இதே மாதிரி 'தி பிரிண்ட்' தளம் ஒரு ஆய்வை முன்வைத்திருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனவர்களில் 11% பேர் வாரிசுகள் என அது சுட்டிக்காட்டி இருக்கிறது.

பாஜகவில் வாரிசுகளின் ஆதிக்கம் எந்தளவுக்குத் தலைவிரித்தாடுகிறது என்பதற்குக் கடந்த ஒரு வருடம் முன்பாகவே விளக்கம் அளித்திருந்தது 'முரசொலி'.

பாஜகவில் 46 வாரிசுகள் அரசியலில் உள்ளனர் என்று விளக்கம் அளிக்கிறார் திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

Dynastic Succession politics in BJP

ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, வாரிசு அரசியல் பற்றி விமர்சித்துவிட்டுச் சென்றுள்ளார். இது ஏதோ முதல்முறை அல்ல.

நாட்டில் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் குடும்ப அரசியல் தலைவிரித்து ஆடுவதாக ஜெ.பி.நட்டா முன்பே பலமுறை விமர்சித்திருந்தார். ஒரு ஆண்டு முன்னதாக கூட தெலங்கானா மாநிலத்தில் பேசிய போது மோடியும் அமித்ஷாவும் குடும்ப அரசியல் பற்றி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த இருவரின் பேச்சுக்கும் விளக்கமளிக்க முன்வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாஜகவில் 16 வாரிசுகள் உள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தார். பாஜகவும் குடும்ப அரசியலின் சங்கிலிதான் என்று விமர்சித்திருந்தார்.

Dynastic Succession politics in BJP

உண்மையில் பாஜக வாரிசு அரசியலுக்கு எதிரானதா? அப்படி அந்தக் கட்சியில் வாரிசுகளே இல்லையா? பட்டியலை அலசி பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது.

பாஜக மத்திய அமைச்சராக இருந்தவர் வேத்பிரகாஷ் கோயல். அவரது மனைவி சந்தரகாந்த் கோயல் இதே பாஜகவில் எம்.பி.ஆக இருந்துள்ளார். இவர்களின் மகன்தான் மத்திய அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

அதேபோன்று தேபேந்திர பிரதான் பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர். அவரின் மகந்தான் தர்மேந்திர பிரதான். இவரும் பாஜகவில் மத்திய அமைச்சராக இருக்கிறார்.

Dynastic Succession politics in BJP

முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மகன் தான் ஜோதிராதித்ய சிந்தியா. இவரும் பாஜகவில் அமைச்சர்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்தவர் பசவராஜ் பொம்மை. அவர் முன்னாள் கர்நாடக முதலமைச்சராக இருந்த பொம்மையின் மகன். இவரைப் போலவே இமாச்சலப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த பிரேம் குமார் துமால். அவரது மகன் தான் அனுராக் தாகூர். இவர் பாஜகவில் செல்வாக்கு மிக்க மத்திய மந்திரியாக இருக்கிறார்.

இந்தக் குடும்பத்தைப் போலவே கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எம்பி ஆகியது பாஜக.

Dynastic Succession politics in BJP

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் கைலாஷ் விஜய் வர்க்கியா. அவரது மகன் அவரது மகன் ஆகாஷ் விஜய் வர்க்கியாவை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக்கியது பாஜக.

மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் வீரேந்திர சக்லேச்சா. இவரது மகன் தான் ஓம் பிரகாஷ் சக்லேச்சா. இவரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைச்சராக்கியது பாஜக.

அடுத்து பாஜகவின் வாரிசு அரசியலின் புகழ்பெற்ற அடையாளமாக இருப்பவர் துஷ்யந்த் சிங்.இவர் ஒரு எம்.பி. இவர் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேவின் மகன்.

மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியை எம்.பி ஆக்கியதும் இந்தப் பாஜகதான். முன்னாள் மத்திய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகனை மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகியது பாஜகதான்.

Dynastic Succession politics in BJP

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்களில் அதிகம் அறியப்பட்டார் பிரமோத் மகாஜன். அவரது மகள் பூனம் மகாஜனை எம்.பி ஆக்கி அழகு பார்த்தது வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வரும் பாஜகதான்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் மகன் ராஜ்வீர் சிங் நாடாளுமன்ற உறுப்பினராக்கியதும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங்கை இதே உத்தப் பிரதேசத்தில் எம்.எல்.ஏ. ஆக்கியது பாஜகதான்.

எம்பி ஆக உள்ள ப்ரீத்தம் முண்டேவின் அப்பாதான் கோபிநாத் முண்டே. இவரும் பாஜகவில் மத்திய அமைச்சராக இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

Dynastic Succession politics in BJP

பாஜகவின் மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் சி.இ. தாகூர். அவரது மகன் விவேக் தாகூர் பாஜகவில் மாநிலங்களவை எம்பி.

பாஜக தலைவர்களில் நட்சத்திர முகமாக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜை டெல்லி வேட்பாளராக அறிவித்துள்ளது வாரிசு அரசியலுக்கு எதிரான இதே பாஜகதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+