மாறன் குடும்பத்திடம் சம்பளம் வாங்கிட்டு! முதல்வரானதும் விஜய் இப்படி பேசலாமா? எ.வ.வேலு அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாறன் குடும்பத்தினர் தயாரித்த படங்களில் நடித்து சம்பளம் வாங்கியவர் விஜய், மாறன் குடும்பத்தினர் விஜய்க்கு முதலாளியாக இருந்தவர்கள், அவரை இழிவாக முதல்வர் விஜய் பேசலாமா என திமுக கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை பதிலுரை அளிக்கும் போது திமுக மீது சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார்.

ev velu

அப்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பளிக்காமல் இருந்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தின் போது முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.

இதை சபாநாயகர் ஏற்க மறுத்ததை அடுத்து திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்கள் மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த திமுக சட்டமன்ற துணைத் தலைவர் கே என் நேரு பேசியதாவது: அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான செய்திகளை ஒரு மணி நேரமாக சினிமா பாணியில் நேற்று முதலமைச்சர் பேசி முடித்திருக்கிறார்.

மிசாவை பற்றி எல்லாம் சொல்கிறார். அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். தவறான செய்திகளை சொல்லக்கூடாது என பேரவை தலைவர் முன்பு கோரிக்கை விடுத்தோம். விஜய் பேசுவதற்கு சப்ஜெக்ட் இல்லாமல் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய எ.வ. வேலு கூறியிருப்பதாவது: மானிய கோரிக்கை தொடர்பாக பேசும்போது சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் பேச வேண்டும். ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் பேசவில்லை. தமிழகத்தில் பல கொலைகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதில் சொல்வார்கள் என எதிர்பார்த்தோம்.

முதலமைச்சர் ஏறத்தாழ 27 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அதை எல்லாம் நாங்கள் பொறுமையாக கவனித்துக் கொண்டு இருந்தோம்.

சட்டமன்றம் விதி 92 என்ன சொல்கிறது என்றால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சட்டமன்றத்தில் பேச கூடாது என்று ஏற்கனவே சட்ட புத்தகம், பேரவை தலைவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதைப் பற்றி பேசவே கூடாது என விதி இருக்கும் பொழுது அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளை பற்றி முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கும் பிரமாணபத்திரத்தை முழுமையாக படித்துக் கொண்டிருந்தார்.

அவர் சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் மிசாவை பற்றி பேசும் பொழுது அவருக்கே உரித்தான உடல் மொழியை வைத்து பேசிக் கொண்டிருந்தார். மிசாவை பற்றி பேசி பலரது தியாகத்தை கொச்சைப்படுத்தினார்.

சர்க்காரியா கமிஷனை பொருத்தவரை அதற்கு முன் எத்தனையோ பதில்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொல்லி இருக்கிறார், சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.

மாறனை பற்றி குறிப்பிட்டு முதல்வர் பேசினார். அவரது மாண்பை குலைக்கும் அளவிற்கு முதலமைச்சர் சில வார்த்தைகளை பயன்படுத்தினார். மாறனைப் பற்றி உலகத்திற்கே தெரியும், டெல்லியில் நடந்த தபால் தலை வெளியீட்டு விழாவுக்கு சென்று மாறன் தபால் தலையை வெளியிட்டவரே முதல்வர் விஜய்.

அவர்களுடைய தயாரிப்பில் படங்களில் நடித்து கோடிக்கணக்கான சம்பளங்களை வாங்கினார். மாறன் குடும்பத்தினர்தான் விஜய்க்கு முதலாளி. அவர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

மிசாவை பொறுத்தவரை அது ஒரு ஜனநாயக போராட்டம் அதை கொச்சைப்படுத்தும் விதமாக உடல் மொழியில் பேசியது கண்டிக்கத்தக்கது. இதை மூன்றையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை அவர்கள் நீக்கவில்லை.

திராவிட மாடல் ஆட்சியில் நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம் ஆனால் இவர்கள் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு சபாநாயகர் இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+