20 ரூபாய் நோட்டுக்கு 4 லட்சம் பணம்.. இந்த ரகசிய நம்பர் இருந்தால் நீங்க லக்கி.. உடனே செக் பண்ணுங்க!
சென்னை: பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்க முடியுமா? எப்படி விற்பது?விரைவாக பணம் சம்பாதிக்க ஆன்லைனில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. அதில், ஒன்றுதான், பழைய நாணயங்கள், பழைய ரூபாய்களை விற்பனை செய்வது... இதுகுறித்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டே உள்ளது. இப்போதும் அப்படியான விளம்பரம் ஒன்று இணையத்தில் ரவுண்டு அடித்து வருகிறது.. அது என்ன?
பழைய நாணயங்கள்: சில நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகரித்தபடியே உள்ளது..

உண்மையை சொல்லப்போனால், அசல் மதிப்பை விட அதிக மதிப்புகள் தற்போது இந்த பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்து வருகின்றன.
பழைய மற்றும் அரிதான ரூபாய் நோட்டுகளை சேகரிப்பது என்பது தற்போது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், சர்வதேச அளவில் ஒரு லாபகரமான வணிகமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தனித்துவமான வடிவமைப்புகள், அரிய வரிசை எண்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்கள் கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு வெளிநாட்டுச் சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
20 ரூபாய் பழைய நோட்டு
இத்தகைய ரூபாய் நோட்டுகள் அவற்றின் முகமதிப்பை விடப்பல மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போகின்றன. இந்தச் சந்தையில் தற்போது 20 ரூபாய் நோட்டுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. ஒரு பழைய 20 ரூபாய் நோட்டு அதன் அரிதான தன்மை மற்றும் தரத்தை பொறுத்து ஆன்லைன் தளங்களில் 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை கூட விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அனைத்து நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களுக்குமே இந்த கண்டிஷன் பொருந்தாது. இதற்கென சில பிரத்யேகமான அடையாளங்கள் பழைய ரூபாய் நோட்டுகளில் இருக்க வேண்டும்..
ஸ்பெஷல் அம்சங்கள்
குறிப்பாக, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மிக முக்கியமாக, அதன் வரிசை எண்ணில் '786' என்ற எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இஸ்லாமிய கலாச்சாரத்தில் 786 என்ற எண் மிகவும் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுவதால், ஆன்மீக மற்றும் அதிர்ஷ்ட நம்பிக்கைகள் காரணமாக இத்தகைய நோட்டுகளுக்கு சர்வதேச அளவில் பெரும் தேவை நிலவுகிறதாம்.. அதேபோல், நோட்டுகள் எவ்வித கிழிசலோ, கறையோ அல்லது மடிப்புகளோ இல்லாமல் மிகத் தூய்மையான நிலையில் இருக்க வேண்டும்..
இந்த நோட்டுகளை விற்பனை செய்வதற்கு எங்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஈபே, ஓஎல்எக்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் எளிதாக விற்கலாம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியும்?
முதலில் உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் 2 பக்கங்களையும் மிகத் தெளிவாக போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு குறிப்பிட்ட இணையதளங்களில் விற்பனையாளராக பதிவு செய்து, அந்த போட்டோக்களை பதிவேற்ற வேண்டும்.
விலையை நிர்ணயம் செய்து, அதனை பதிவில் தெரிவிக்க வேண்டும். உங்களது போன் நம்பர், மின்னஞ்சல் ஐடியையும் கொடுத்தால் போதும். இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையென்றால், உங்களிடம் அணுகுவார்கள்.
இதுபோன்ற பிரத்யேக பழைய கரன்சி நோட்டுகளை விற்க, நிறைய ஆன்லைன் வெப்சைட்கள் உள்ளன.. இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானது தான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி
ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் மற்றும் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் நீங்கள் மட்டுமே கவனமாக செயல்பட வேண்டும்.... ஏனென்றால், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது மிக மிக முக்கியமான விஷயம்...!!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications