ஆதார் கார்டுல போன் நம்பரை மாற்றணுமா! எங்கேயும் அலைய வேண்டாம்.. வீடு தேடி அதிகாரியே வருவாங்க!
சென்னை: ஆதார் கார்டில் சில தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அரசு இணையதளத்தில் பதிவு செய்தால் போதும், அதிகாரிகளே வீடு தேடி வந்து உங்களுக்கு பணிகளை செய்து கொடுப்பர்.
ஆதார் கார்ட்டில் செல்போன் எண், வீட்டு முகவரி, பெயரில் திருத்தம், வயதில் ஏதேனும் திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சில நேரங்களில் இருக்கும்.

ஆதார் அனைத்துக்குமான ஆதாரமாக விளங்குகிறது. வயதானவர்கள் அப்படிப்பட்ட நீண்ட வரிசையில் நின்று வாங்குவது சிரமம். அது போல் வேலைக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்தில் போய் வாங்க முடியாத நிலை உள்ளது.
இதனால் பலர் தங்கள் முகவரியை மாற்றாமல் அவதிப்படுகிறார்கள். அரசு நலத்திட்டங்களுக்கான டோக்கன் பெறும் போது கூட ஆதார் முகவரியில் அந்த கார்டுதாரர் இல்லாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசு மிகப் பெரிய உதவியை பொதுமக்களுக்கு செய்கிறது. ஆனால் இது இத்தனை நாட்களாக நமக்கு தெரியாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து Film Food Fun Fact என்ற எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நம் ஆதார் கார்டில் சில தகவல்களை அப்டேட் செய்ய ஆன்லைனிலேயே வசதிகள் வந்து விட்டன. ஆனாலும் மொபைல் நம்பர் சேஞ்ச் பண்ணும் போது ஆன்லைனில் செய்ய முடியாது. அதற்கு ஆதார் சென்டருக்கு நேரில் தான் சென்று கைரேகை வைக்க வேண்டும். ஆனால் அந்த சென்டர்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடிவதில்லை.
அதனால் இந்த வெப்சைட்டில் அப்ளை செய்தால் உங்கள் இருப்பிடம் தேடி வந்து அப்டேட் செய்து தருவார்கள். இதுவும் அரசாங்க இணையதளம் தான் இந்திய தபால் துறையினரால் இயக்கப்படுகிறது. தேவை உள்ளவர்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையதளம் மூலம் மேலும் பல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இணையதள முகவரி
https://ippbonline.com/web/ippb/ippb-customers தேவைப்படும் உங்கள் சொந்தங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவும். இவ்வாறு அந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த லிங்கிற்கு சென்றால் அதில் door step banking service request form என்பதை ஓபன் செய்தால் அதில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன.
அதில் Aadhar Mobile Update என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதில் Any specific request என இருக்கும். அதில் Aadhar Mobile Update என்ற இடத்தில் செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சப்மிட் பட்டனை அழுத்தினால் போதும். Your Submission has been Successful என வரும். நாம் கொடுத்த தகவல்கள் எல்லாம் தபால் அலுவலகத்திற்கு செல்லும். அங்கிருந்து தபால்காரர் வீட்டுக்கே வந்து கைரேகையை வாங்கிக் கொண்டு நம் ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை மாற்றி தருவார்.












Click it and Unblock the Notifications