கூகுளில் 67 -னு ‛டைப்' பண்ணுங்க.. காத்திருக்கும் ‛சர்ப்ரைஸ்'.. என்ன செல்போன் - லேப்டாப் ஸ்கிரீன் நடனமாடுது!
சென்னை: நாம் தேடும் அனைத்தையும் கூகுள் நமக்கு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இப்போது புதிய சர்ப்ரைஸை தந்துள்ளது. கூகுளை ‛ஓபன்' செய்து 67 என்று ‛டைப்' செய்தால் செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பின் ஸ்கிரீன் நடனமாடுகிறது. இந்த சர்ப்ரைஸின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கூகுள் என்பது தற்போது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அனைவரின் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் கூகுள் இருப்பது தான் இதற்கு சான்றாகும்.

ஒவ்வொருவரும் கூகுள் ‛சர்ச் இன்ஜினை' பயன்படுத்தி வருகிறோம். நமக்கு தெரியாத விஷயங்கள், வரலாறுகளையும் ஒரே கிளிக் மூலமாக கூகுளிடம் இருந்து படித்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
இதனால் உலகிலேயே அதிகமான மக்கள் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கூகுளும் தினமும் மக்களுக்கு ‛சர்ப்ரைஸ்' வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் கூகுள் தனது doodle எனும் முகப்பு பக்கத்தை மாற்றி வருகிறது. குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வு அல்லது நடந்த நிகழ்வின் அடிப்படையில் இந்த டூடூல் இடம்பெற வைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது ‛67' என்ற ‛சர்ப்ரைஸை' கூகுள் வழங்கி உள்ளது.
அதாவது செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றில் கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என டைப் செய்து ‛என்டர்' பட்டனை தட்டினால் போதும். சில விநாடிகள் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப் ஸ்கீரின் ‛ஷேக்' ஆகும். நடனமாடுவது போல் ஸ்கீரின் மேலும், கீழுமாக சிலமுறை சென்று வரும். இதனை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். செல்போன், லேப்டாப்பில் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் தந்துள்ள ‛சர்ப்ரைஸ்'. இதனால் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பிற்கு எந்த பிரச்சனையும் வராது.
கூகுளில் இந்த ‛சர்ப்ரைஸின்' பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை சர்ப்ரைஸ் செய்ய "ஈஸ்டர் எக்ஸ்" (Easter Eggs) எனும் மறைக்கப்பட்ட அம்சங்களை பயன்படுத்தி வருகிறது. இது கூகுள் பயனர்களை ஆச்சரியப்படுத்தவும், மகிழ்ச்சி படுத்தும் வகையிலான அம்சமாகும்.
தற்போது ‛ஈஸ்டர் எக்ஸ்' முறையில் கூகுள் கொண்டு வந்துள்ளது தான் 67 அல்லது 6-7 அம்சம். சமீபத்தில் 6-7 என்ற மீம் இணையதளங்களில் அதிகரிக்க தொடங்கியது. அதனடிப்படையில் தான் கூகுள் 67 அல்லது 6-7 என்பதை ‛ஈஸ்டர் எக்ஸ்' பகுதியில் கொண்டு வந்துள்ளது. அதன்படி அந்த எண்ணை கூகுளில் டைப் செய்தால் சில விநாடிகள் ஸ்கிரின் மேலும், கீழுமாக செல்லும்.
இது முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக கூகுள் உருவாக்கி உள்ளது. சில வினாடிகள் ஸ்கிரின் குலுங்குவது நின்றுவிடும். ஒருவேளை தொடர்ந்து ஸ்கிரின் குலுங்கினால் அதில் இருந்து வெளியேறினால் போதும் ஸ்கிரீன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications