வாய்விட்டே கேட்ட ஈஸ்வரன்.. "கொஞ்சம் டைம் கொடுங்க".. திமுக கூட்டணி கட்சியிடமிருந்து பறந்த கோரிக்கை
ஆதார் நம்பருடன் மின் இணைப்பு செய்ய கால அவகாசம் தேவை என்று கேட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன்
சென்னை: பிப்ரவரி 15 வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு செய்ய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை, மேலும் கால அவகாசம் வழங்கி காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன.. மேலும், இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.. எனவே, இதற்கான பணியும், கடந்த நவம்பர் 15-ந்தேதி ஆரம்பமானது..

வெப்சைட்கள்
இதற்காகவே ஸ்பெஷல் முகாம்களும் மின்சார வாரிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டன... வெப்சைட்கள் மூலமாகவும் ஆதார் நம்பரை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது... ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமானோர் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருந்தனர். அதனால், இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது..

ஆதார் எண்
ஆனால், அப்போதும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதனால், மறுபடியும் 15 நாட்கள் மின்சார வாரியம் டைம் தந்தது.. பிப்ரவரி 15ம் தேதி அதாவது நாளை மறுநாளுடன், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுடன், ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் அதற்குள் இணைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கண்டிஷன்
பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு, இந்த அவகாசம் எக்காரணம் கொண்டு நீட்டிக்கப்படாது என்றும் மின்சார வாரியம் கண்டிஷனாக சொல்லிவிட்டது. மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தற்போது வலியுறுத்தி உள்ளது.. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழ்நாடு அரசு வரும் பிப்ரவரி 15-ம் தேதி வரை வீடுகளுக்கான மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்க கால நீடிப்பு செய்துள்ளது. இதை மேலும் நீடிக்க வேண்டும்.

கனெக்ஷன்
ஏன் என்றால், மின் இணைப்புகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு மின் இணைப்பின் உரிமையாளர், வாடகைதாரர் மற்றும் உரிமைதாரர் அல்லாத வாரிசு அடிப்படையில் மின் இணைப்பு பயன்படுத்தி வருபவர்கள் என பயனாளர்களின் ஆதார் எண் மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. மின் இணைப்புகளுடன் எந்த ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வசதி இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மேலும் தவறாக ஏதாவது ஆதார் எண்கள் உள்ளீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை மாற்றும் வசதியும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

கெடு ஓவர்
எனவே பொதுமக்கள் மற்றும் வாடகைதாரர்கள் நலன் கருதி மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்களை சரிபார்க்கும் வசதியும் தவறான ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருந்தால் அவற்றை மாற்றும் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கு உண்டான கால அவகாசமும் பொதுமக்களுக்கு நீடிப்பு செய்து கொடுக்க வேண்டியது மக்கள் நலன் காக்கும் தமிழ்நாடு அரசின் கடமையாகும். எனவே வரும் பிப்ரவரி 15 வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு செய்ய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை மேலும் கால அவகாசம் கொடுத்து நீடிப்பு செய்ய வேண்டும்" என்று ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications