மின்சார வாரியம் சொல்றதை பாருங்க.. கரண்ட் பில்லில் அன்று போட்ட கிடுக்கிப்பிடி.. இன்று சூப்பர்ல.. செம
சென்னை: மின்வாரியம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது.. இது மின்சார வாரியத்துக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது. என்ன காரணம்?
2 நாட்களுக்கு முன்பு, மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.. அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்டங்கள்: குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பிறகு, அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மாநிலம் முழுமையிலும், பழுதடைந்த மீட்டர்கள் எவ்வளவு? மின் கட்டணம் செலுத்தாதவர்கள் எத்தனை பேர் என்ற தகவலும் தனித்தனியாக வெளியாகியிருந்தது. அந்தவகையில், மாநிலம் முழுதும் ஒரு முனைப்பிரிவில், 1.74 லட்சம் மீட்டர்களிலும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களிலும், மும்முனை பிரிவில், 32,000 மீட்டர்களிலும் குறைபாடுகள் உள்ளதாக மின் வாரியம் கண்டறிந்துள்ளது..
அதிகப்பட்ச மீட்டர்கள்: இதில், அதிகப்பட்சமாக மீட்டர்கள் பழுதாகி இருப்பது செங்கல்பட்டு மாவட்டம்தானாம்.. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 13,451 மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரியில் 13,351 மீட்டர்களும், இதற்கு அடுத்தபடியாக சென்னை தெற்கில் 13,125 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளன.
நாகை மாவட்டத்தில் 10,654, திருச்சி நகரில் 10,212, சென்னை மேற்கில் 9,365, நெல்லையில் 9,253, சென்னை வடக்கில், 8,904, தஞ்சையில் 8,557 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளதாக மின்வாரியம் லிஸ்ட் போட்டு கூறியுள்ளது.
கரண்ட்பில்: அதேபோல, இந்த மாதம் 12ம் தேதி வரை 59,565 பேர் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளார்களாம்.. இவர்கள் அனைவருமே, தங்களின் அவகாசத்தை தாண்டி அதாவது 10 நாட்களுக்கும் மேலாக, கரண்ட் பில் கட்டாமல் இருக்கிறார்களாம்.. இந்த மின் கட்டணம் மட்டும் 47.26 கோடியாகும்.. இவர்கள் அனைவருமே உடனடியாக பில் கட்ட வேண்டும் என்றும், அவர்களின் இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், கட்டணத்தை விரைந்து வசூலிக்குமாறும் மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதாவது, கிராமங்களில் தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்ற சேவை பணிகளை ஊராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து, மின் கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசத்தை, மின் வாரியம் அளித்து வருகிறது.. அப்படி டைம் தந்தும்கூட, குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துவதில்லையாம்.. இதன்காரணம்க, 750 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது..
இந்த கட்டணத்தையெல்லாம் விரைந்து செலுத்துமாறு, மின் வாரியம் எத்தனையோ முறை வலியுறுத்தியிருக்கிறது.. அப்படியும் கரண்ட் பில் கட்டவில்லை.. அதனால், மின் வினியோகம் துண்டிக்கும் நடவடிக்கையும் எடுக்கும் நிலைமை ஏற்பட்டது.
மின்கட்டணம்: இப்படி ஒரு சாட்டையை மின்துறை சுழட்டியதால் இப்போது என்ன நடந்தது தெரியுமா? 311 ஒன்றியங்களில் உள்ள, 2,345 ஊராட்சிகள், 5,346 மின் இணைப்புகளை செலுத்திவிட்டார்களாம்.. அதாவது, 200 கோடி ரூபாய் மின் கட்டணத்தை ஒரே தவணையில், மின் வாரியத்திற்கு செலுத்தி விட்டார்களாம்.. சபாஷ்..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications