டபுள் டிலைட்! வாட்ஸ் ஆப் + யூபிஐ இணைந்து மின் கட்டணம் செலுத்தும் முறை! தமிழக அரசு அதிரடி
சென்னை: வாட்ஸ் ஆப் மற்றும் யூபிஐயும் இணைந்து மின்சார கட்டணத்தை மிகவும் எளிதாக்கியுள்ளன என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பாதுகாப்புடன் பணம் செலுத்த சில வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது. மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அப்போதெல்லாம் மின்சார வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

இதைத் தொடர்ந்து இணையதள வசதி வந்ததும் ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு தரப்பட்டது. இதை வைத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.
இதனால் மீட்டரை பார்த்து கார்டில் என்ட்ரி போட வேண்டிய வேலையே இல்லை. நாம் பயன்படுத்திய யூனிட்கள் ஆன்லைனில் ஏறிவிடும். அதை வைத்து நாம் பணம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு ✅ இருக்கும். மேலும் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும். அதில் View Bill, Pay bill என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்யலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் போன் பே, கூகுள் பே என எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) உங்கள் மின்சாரக் கட்டணம் தயாராக இருக்கும்போது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும். பில்லை பார்க்கலாம், செலுத்தலாம் என தமிழ்நாடு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என தகவல்கள் வருகின்றன. அது போல் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications