"கரண்ட் பில்"லில் மாற்றம் வருது.. ஷாக்கடிக்குதா இபி கட்டணம்? இதோ மின்வாரியம் அதிரடி.. இனிமே நிம்மதி
சென்னை: மின்சார வாரியம் பல்வேறு அதிரடிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமல்படுத்தி வரும்நிலையில், மின்கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..
வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய "ஸ்டேடிக்" என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

முறைகேடுகள்: இதன்மூலம் மின்வாரிய ஊழியர்கள், அதை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர்..
இந்நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் ..
ஊழியர்கள்: அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.. ஆனால், விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அதாவது, மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, பல ஊழியர்கள் குறித்த நாளில் செல்வதில்லையாம்.. மேலும், தங்கள் இஷ்டத்திற்கு கணக்கு எடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கூட, மானிய சலுகையின்றி, அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.. இப்படி பல குற்றச்சாட்டுகள் கிளம்பியதால்தான், இந்த விஷயத்தில் மின்வாரியம் தலையிட்டுள்ளது..
முறைகேடுகள்: இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகவே, மின் இணைப்புகளில் ஆய்வு செய்யுமாறு, மின் வாரியமானது, பொறியாளர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் மலர்விழி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில், குறைந்தது, 10 சதவீத இணைப்புகளை, அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும்...
கணக்கீடு: அதில், செக் ரீடிங் எனப்படும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை சோதனை செய்ய வேண்டும்... மின் கணக்கீட்டின் துல்லியத்தை உறுதி செய்யும்படி, அனைத்து ஆய்வு அதிகாரிகளையும் அறிவுறுத்த வேண்டும். இதனால், உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் வாயிலாக, நுகர்வோரின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின்கட்டண முறை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது.. அதாவது, இதுநாள் வரை, கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது வங்கி வரைவோலை அல்லது காசோலை வழியாக செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது..
அதற்கு கீழ் உள்ள தொகையை செலுத்த வேண்டியவர்கள் ஆன்லைன் மட்டுமின்றி நேரடியாகவும் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக சென்று மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
விரைவில் அறிவிப்பு: இந்த நிலையில் மின்சார வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக நுவர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது 5000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக கடந்த ஆண்டு குறிக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து அது ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.. ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்சார வாரிய அலுவலகங்களில் செலுத்தக்கூடிய அதிகபட்ச கட்டணம் ஆயிரமாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications