"இங்கும் வாக்கு திருடர்கள் உள்ளார்கள்.. ஆனால் தடுக்கும் தலைவன் இருக்கிறார்” - அனல் பறக்கவிட்ட ஆ.ராசா
சென்னை: "தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று கேரள முதல்வர் கதறி கதறி அழுகிறார். நாமும் ஒப்புக்கொள்கிறோம் தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று. ஆனால் தமிழ்நாட்டில் கூச்சல் இல்லை, குழப்பம் இல்லை. திருடர்கள் இருக்கிறார்கள். ஆனால் திருடாமல் பார்த்துக் கொள்ளும் தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது" என திமுக எம்.பி. ஆ.ராசா பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி - சென்னை, விழுப்புரம் மண்டல மாநாடு" இன்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டர்.

ஆ.ராசா பேச்சு
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பியுமான ஆ.ராசா, "சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பீகார் தேர்தலுக்காக அங்கு சென்றார். வாக்குத் திருடர்களே ஜனநாயகத்தை வாழ விடுங்கள் என்று தெருவில் இறங்கிப் போராடினார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய பதவியில் இருக்கக்கூடிய தலைவர் தெருவுக்கு வந்து போராடிய போதும் பீகாரில் நீதி கிடைக்கவில்லை.
திருடர்கள் இருக்கிறார்கள்
சில நாட்களுக்கு முன்னால் மேற்கு வங்க முதல்வர், இதுவரை எந்த முதல்வரும் செய்யாததை செய்தார். உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். வாக்குத் திருடர்களை அங்கு வெளிப்படையாக விமர்சித்தார். உச்ச நீதிமன்றமே அதிர்ந்து போனது. கேரள முதலமைச்சர், தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று கதறிக் கதறி அழுகிறார்.
நாமும் ஒப்புக்கொள்கிறோம், தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று. ஆனால் இங்கு கூச்சல் இல்லை, குழப்பம் இல்லை. வாக்குத் திருடர்கள் இருக்கிறார்கள். ஆனால் திருடாமல் பார்த்துக்கொள்ளும் தலைவரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் தவறுகளை முரசொலி வாயிலாகவும், களப்பணி வாயிலாகவும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்கத் தலைவரைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. வேறு எந்த மாநிலக் கட்சியும் செய்யாத வகையில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யும் பணியைத் திமுக முகவர்கள் மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள்." எனப் பேசினார்.
ஸ்டாலின் வரவேண்டும்
மேலும் பேசிய ஆ.ராசா, "விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, அன்புக்கரங்கள் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என, இதற்காக மட்டுமா இந்த முதலமைச்சர் மீண்டும் வர வேண்டும். ஆண்டுக்கு 4,000 மருத்துவ மாணவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப் பட்டவர்களைப் படிப்பதற்கு வழிவகை செய்தாரே, அதற்காக மட்டுமா அவர் மீண்டும் வர வேண்டும். அதற்காகவும் வர வேண்டும்.
நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரசியல் சட்டத்தை உருவாக்கினர். எத்தனை மதங்கள், எத்தனை ஜாதிகள், எத்தனை மொழிகள் என இத்தனை வேற்றுமைகளையும் ஒற்றுமையாக வைத்து நாம் எப்படி ஆளப்போகிறோம் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அரசியல் சட்டம்.
அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்
அந்த அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதற்கு சட்டமன்றம் நாடாளுமன்றம் இருக்கிறது. நாடாளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உருவாக்குவதற்கு தேர்தல் ஆணையம் இருக்கிறது. இவை தவறு செய்தால், கேள்வி கேட்பதற்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
இத்தனையும் தந்திருக்கக்கூடிய அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, 'ஒரே ஆட்சி, ஒரே மதம், ஒரே மொழி' என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிற அமித் ஷாவுக்கும், மோடிக்கும் பதில் சொல்லக்கூடிய, தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தத்துவத் தலைவன் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற இந்த மாமனிதர்தான்.
ஒட்டுமொத்த இந்தியாவே இன்று இவரைத் தான் உற்று நோக்குகிறது. 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற முழக்கத்தோடு 2026 தேர்தலை நோக்கி நாம் வெற்றி நடை போடுவோம் என ஆ.ராசா பேசினார்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications