சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல் வேலைகள்.. 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, புதிதாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

EC Orders Appointment of Electoral Registration Officers for All 234 Constituencies Ahead of 2026 Polls

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புகளை வழங்கி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, பதிவு செய்வதற்கு வருடத்திற்கு நான்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. இது போன்று, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு ஐனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வாக்காளர் சுருக்க திருத்த பட்டியல் பணிகள் நடைபெறும். இந்த பணிகளின் போது பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த நிலையில், இந்த பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிகாரிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+