விரைவில் லோக்சபா தேர்தல்? சென்னையில் தொடங்கிய தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம்! 10 கட்சிகள் பங்கேற்பு
சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்தத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.

அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையமும் லோக்சபா தேர்தலை சுமூகமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தல் ஆணையம்: இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்துகொள்கின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையருடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, திதேஷ் நியாஸ், அஜய் பாலு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்தை விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல். மொத்தம் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நடக்க உள்ளது.
சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை இந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்க உள்ளது. அவர்களிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் பெறப்படும்.
ஆலோசனை கூட்டம்: அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
இரண்டாம் நாளான நாளை காலை, 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆலோசகர் கொண்ட குழு ஆலோசனையை நடத்துகிறது. அப்போது தங்கள் மாநிலங்களின் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் ஆலோசனை: அதன் பிறகு காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, ஐடி துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
பிறகு தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சுமூகமாக லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications