கோவைக்கு போன பணம் தப்பித்துவிட்டது.. நயினார் கனெக்சன்.. மாட்டிக்கிட்டாங்க.. சீக்ரெட்டை உடைச்சிட்டாரே
சென்னை: கோவைக்கு போன பணம் தப்பித்துவிட்டது. நெல்லைக்கு போனது மாட்டிக்கொண்டது. பாஜக இதை எல்லாம் செய்துவிட்டு தங்களை உத்தம புத்திரர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விமர்சனம் வைத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை
இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
மறுப்பு; இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: இந்த நிகழ்வு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தேர்தல் கமிஷன்தான் 4 கோடி ரூபாயை பிடித்தது. நயினார் இந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். ஆனால் பிடிபட்ட ஆள்.. இவர் ஹோட்டலில் வேலை பார்க்கிறார். ஒருவர் அவரின் சொந்தக்காரர். அவர்கள் நெல்லைக்குதான் செல்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நயினார் இந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.
பிடிபட்டவங்களே நெல்லைக்குதான் செல்கிறோம் என்று சொல்கிறார்கள். இப்படி இருக்க நயினார் மறுத்தால் அதை சின்ன குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள். தேர்தல் கமிஷன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நயினார் சொந்தக்காரர் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடந்துள்ளது.
அப்படி இருக்க நயினார் வீட்டிலும் ரெய்டு செய்ய வேண்டும். இதுவே திமுகவில் ஒருவர் மாட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும். இதேபோல் கோவைக்கு போன பணம் தப்பித்துவிட்டது. நெல்லைக்கு போனது மாட்டிக்கொண்டது. பாஜக இதை எல்லாம் செய்துவிட்டு தங்களை உத்தம புத்திரர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள்.
நாங்கள் பணமே கொடுக்கவில்லை. அண்ணாமலை ஏன் பிரஸ் வேனை தடுத்து நிறுத்துகிறார். பணம் கொடுக்க போகிறார்.. அது தெரிய கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். செய்திகளை விட வேண்டியது தானே ? , என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications