SIR பணிகள்: தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் 12 ஆவணங்கள் எவை எவை? லிஸ்ட் வெளியீடு!
சென்னை: தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. SIR பணிகளுக்கு என்னென்ன ஆவணங்களை அளிக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, இன்று தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் இந்த சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதற்கிடையே, 2004 வாக்காளர் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பதாரர் வாக்காளர் பட்டியலில் உறவினர்களை சேர்க்கலாம், அல்லது நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003-2004 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லையென்றால், மக்கள் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டலாம் என்று அந்த ஆவணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
12 ஆவணங்கள் என்னென்ன
* மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர் / ஓய்வூதியர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை / ஓய்வூதிய ஆணை.
* 01.07.1987 க்கு முன்பு இந்திய அரசாங்கம் / உள்ளூராட்சி / வங்கிகள் / தபால் அலுவலகம் / LIC / பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை / சான்றிதழ் / ஆவணம்.
* தகுதியான அதிகாரி வழங்கிய பிறப்புச் சான்றிதழ்.
* பாஸ்போர்ட்.
* அங்கீகரிக்கப்பட்ட கல்விக் குழுக்கள் / பல்கலைக்கழகங்கள் வழங்கிய மத்திய (மெட்ரிக்குலேஷன்) / கல்விச் சான்றிதழ்.
* மாநில அரசின் தகுதியான அதிகாரி வழங்கிய நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்.
* வன உரிமைச் சான்றிதழ்.
* தகுதியான அதிகாரி வழங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) / அட்டவணை சாதி (SC) / அட்டவணை பழங்குடி (ST) அல்லது ஏதேனும் சாதி சான்றிதழ்.
* குடிமக்கள் தேசிய பதிவேடு (இது உள்ள இடங்களில்).
* மாநில / உள்ளூர் அதிகாரிகள் தயாரித்த குடும்பப் பதிவு. ஆகிய 12 ஆவணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால்
2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஆவணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து தற்போதைய பட்டியலில் பெயர் இருப்பவர்களும் கூடுதலாக எந்த ஆவணமும் வழங்க வேண்டியது இல்லை.
ஒருவேளை அவர்களின் பெயர்கள் 2003 ஆம் ஆண்டு பட்டியலில் இல்லை என்றாலும் அவர்களுடைய பெற்றோர் பெயர் இடம் பெற்று இருந்தால் அவர்களும் கூடுதலாக ஆவணம் எதுவும் அளிக்க வேண்டியதும் இல்லை. ஒருவேளை தற்போது வாக்கு இருப்பவர்கள் 2003 ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் அவர்கள் மட்டுமே இந்த கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications