குறைந்த இதய துடிப்பு, மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட விவேக்.. என்ன நடந்தது?
சென்னை: குறைந்த இதய துடிப்புடன் மயக்க நிலையில் நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
நகைச்சுவை நடிகர் விவேக், சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவர் சினிமாவில் தனது நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கும் கருத்துகளை மையமாக வைத்து நடித்துள்ளார்.
அப்துல் கலாம் மீது அதிக பற்றுக் கொண்ட அவர், மரம் நடுதலை ஊக்குவித்து வருகிறார். இவர் தனது மகனின் பெயரில் சாய் பிரசன்னா பவுண்டேஷனை தொடங்கி மரநடுதலை செய்து வருகிறார்.

பிறந்தநாள்
கலாம் பிறந்தநாள், தன்னுடைய பிறந்தநாள்களில் மரம் நடுதலை ஊக்குவிக்கும் அவர், சமூக பொறுப்புணர்வு கொண்டவர். இந்த நிலையில் இன்று காலையில் படப்பிடிப்பில் இருந்த விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவு
இதையடுத்து மயங்கி விழுந்த அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டபோதே அவரது இதய துடிப்பு குறைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்ஆர்ஐ ஸ்கேன்
அங்கு இதய சிகிச்சை நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், விவேக் சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.

விவேக்
கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு, விவேக் நன்றாகத்தான் இருந்தார். அவர் விரைவில் நலமுடன் திரும்புவார் என்றார் நிகில் முருகன். இந்த நிலையில் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ கருவி கொடுக்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications