ஆனந்த் ஸ்ரீனிவாசனின் “தக் லைப்” சம்பவம்.. அரண்டுபோன ஆங்கர்! வாயை திறந்தாலே “மீம் கண்டெண்ட்தான்”
சென்னை: பணம் சேமிக்க 150 ரூபாய்க்கு உண்டியல் வாங்கியதாக சொன்ன நெறியாளரிடம் பிளாஸ்டிக் டப்பா வாங்கி இருக்கலாம் என்று ஆனந்த் சீனிவாசன் பேசியது தற்போது மீமாக மாறி உள்ளது.
பிரபல பொருளாதார அறிஞரான ஆனந்த் சீனிவாசன் தொலைக்காட்சிகளிலும் யூடியூப் சேனல்களிலும் தொடர்ந்து பொருளாதாரம் தொடர்பாக பேசி வருகிறார். அதேபோல் அவரும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பொருளாதாரம் தொடர்பான தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

குறிப்பாக சிக்கனம், சேமிப்பு தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது மீம் கண்டெண்டுகளாக மாறி இருக்கின்றன. இவரும் தொடர்ந்து கிரியேட்டர்களுக்கு தொடர்ந்து கண்டெண்டுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இவரது சேனலில் ஒரு நேர்காணலில் நெறியாளரிடம், உண்டியல் வாங்க சொன்னது என்னாச்சு என்று கேட்க, "நீங்கள் சொன்ன மாதிரியே பேரம் பேசி வாங்கிவிட்டேன்." என்றார்.
"நீங்கள் சொன்ன மாதிரியே பேரம் பேசி வாங்கிவிட்டேன்." என்றார்.
அடுத்து வாங்கிப்பார்த்த ஆனந்த் சீனிவாசன், எவ்வளவு சொன்னார்கள்? என்று கேட்க, 150 ரூபாய் சொன்னார்கள், 100 ரூபாய்க்கு வாங்கினேன் என்று சொன்னார். "இதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா வாங்கி இருக்கலாமே, அப்படி செய்து இருந்தால் 10 வருசத்துக்கு ஓட்டி இருக்கலாம்." என்று ஆனந்த் சீனிவாசன் சொல்ல நெறியாளர் அரண்டு போனார். தற்போது இது மீம் கண்டெண்டாக மாறி உள்ளது.
சில நாட்கள் கழித்து மற்றொரு நேர்காணலில் அதே நெறியாளர், "நீங்கள் சிறு வயதில் உண்டியல் வைத்து பணம் சேமித்து இருக்கிறீர்களா? எந்த வயதில் சேமிக்க தொடங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். உடனே ஆனந்த் சீனிவாசன், "100 சதவீதம் பணம் சேர்த்து உள்ளேன். 5 வயதில் இருந்து சேமிக்க தொடங்கினேன். என் அப்பாதான் அந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தார். முதலில் என் அப்பா ஒரு பன்றி வடிவ உண்டியல் கொடுத்தார். அதன் பிறகு ஆண்டுதோறும் திருவிழாவில் உண்டியல் வாங்கி தருவார்." என்றார்.
அப்போது நெறியாளர், "நீங்கள் அதேபோல் என்னிடம் உண்டியல் வாங்க 200 ரூபாய் கொடுத்தீர்கள். நான் 200 ரூபாய்க்கு சொன்ன உண்டியலை பேரம் பேசி 100 ரூபாய்க்கு வாங்கி வந்தேன்." என்றவுடன் ஆனந்த் சீனிவாசன், அதில்தான் காசே இல்லையே என்றார். உடனே நெறியாளர், அதை விடுங்க, என்னுடைய பேரம் பேசும் திறமையை பாருங்க. என்றார்.

உடனே ஆனந்த் சீனிவாசன், "பேரம் பேசுவதற்குதான் நான் உன்னை அழைத்து வந்தேனா? நான் சொல்லி 2 மாதம் ஆகிறது. அந்த 2 மாதத்தில் நீங்கள் 10 பேர் தினம் 50 ரூபாய் போடுங்கள் என்றேன். 3 மாதம் ஆகிறது. எவ்வளவு சேர்ந்து இருக்க வேண்டும். அந்த உண்டியலில் 4500 ரூபாய் இருக்குமா? என கேட்டவுடன் நெறியாளர் அவ்வளவு காசெல்லாம் இருக்காது என்றார்.
உடனே ஆனந்த் சீனிவாசன், "அந்த உண்டியலை எடுத்து வாருங்கள். உடைத்து பார்ப்போம்." என்றார். தரை வீணாகிவிடும் என நெறியாளர் ஆட்சேபனை தெரிவிக்க, நாளை சுத்தப்படுத்திக்கொள்ளலாம், நானே உண்டியலை உடைக்கிறேன் என்று கூறினார் ஆனந்த். உடனே அந்த உண்டியலை வாங்கி தரையில் போட்டு உடைத்தார் அவர்.
"ஜனவரி 10 ஆம் தேதி உண்டியல் வாங்கினீர்கள். இன்று 90 நாளாகிவிட்டது. 10 பேரும் ஒருநாளைக்கு 50 ரூபாய் போட்டிருந்தால்கூட ஒருநாளைக்கு 450 ரூபாய் வந்திருக்கும். 100 நாட்கள் அப்படி சேர்த்திருந்தாலும் 45,000 இருக்க வேண்டும். இந்த உண்டியலில் 100 ரூபாய் கூட இல்லை. 92 ரூபாய்தான் இருக்கிறது. நீ என்னிடம் டிப்ஸ், சேமிப்பு பற்றி பேசுகிறாய்.

தினம் ஒரு ரூபாய் போட்டிருந்தால்கூட 150 ரூபாய் இருந்திருக்கும். இந்த உண்டியலை வாங்கிய காசு கூட இதில் இல்லை. அதில் இருப்பதும் நான் கொடுத்த காசு. உங்க கோவா டூர் கேன்சல். இனியாவது காசு சேமித்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிரிமெண்டையும் கேன்சல் செய்துவிடுவோம்." என்று தெரிவித்தார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications