ஈசிஆர் ரோட்டில் கணவன் பச்சை துரோகம்! திருநங்கையுடன் அப்படியென்ன உறவு? சென்னையை அதிரவிட்ட வாய்ஸ் நோட்
சென்னை: சென்னையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண குடும்ப பிரச்சனை, ஒரு பெண்ணின் உயிரிழப்பில் முடிந்துள்ளது. கணவர் தன்னுடன் வாழ விரும்பாமல், வேறொரு நபருடன் வாழப்போவதாக சொல்லிவிட்டு போய்விட்டாராம்.. உடனே மனைவி, தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. என்ன தெரியுமா?
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ், ரதி தம்பதியர். இவர்களது குடும்பத்தில் கடந்த சில வருடங்களாகவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜேஷ், எண்ணூர் பகுதியை சேர்ந்த பிரபல திருநங்கை யூடியூபர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சென்னை திருநங்கை
யாகம், மாந்திரீகம் செய்பவர் திருநங்கை.. ஒரு பிரச்சனையாக சந்திக்க செல்லும்போதுதான் இவர்களுக்குள் உறவு ஏற்பட்டுள்ளது.. இதை ரதி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்.
கணவரிடம் இந்த உறவை கைவிடும்படி ரதி பலமுறை சொல்லிவிட்டார். திருநங்கையுடன் கள்ளக்காதலை இப்படியே தொடர்ந்தால் , தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஆனால், ராஜேஷ் அந்த தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மெடிக்கல் பில்
இந்த பிரச்சனை ஒருகட்டத்தில் ரதியை வெறுப்புக்குள்ளாக்கியது.. அதற்கு பேசாமல் தற்கொலையே செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்..சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.. ஆனால், குடும்பத்தினர் அவரை காப்பாற்றி விட்டனர். அதுமட்டுமல்ல, ரதியின் மருத்துவ செலவுக்காக அந்த திருநங்கைதான் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருநங்கை விவகாரத்தில் நொந்து போயிருந்த ரதி, இதை கேட்டதும், மேலும் ஆவேசமானார்..
இதனிடையே, தான் செலவழித்த பணத்தை ராஜேஷ், ரதி ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று அந்த திருநங்கை எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ராஜேஷிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ராஜேஷ் - திருநங்கை உறவு
இதற்கு பிறகு ராஜேஷ் ஜாமினில் வெளியே வந்து விட்டார்.. ஆனால் மீண்டும் அந்த திருநங்கையுடன் தொடர்பில் இருந்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து மேலும் கொதித்து போனார்.. இதனால் ஏற்கெனவே பிரச்சனையில் இருந்த தம்பதியருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 20ம் தேதி ராஜேஷுக்கும் ரதிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இனிமேல் அந்த திருநங்கையுடன்தான் வாழப்போவதாக ராஜேஷ் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
கடைசி வாய்ஸ் நோட்
இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரதி, தனது சித்தி ஜானகி மற்றும் மற்றொரு உறவினருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். நான் இனி வாழப்போவதில்லை, எனக்கு துரோகம் செய்தவர்களை சும்மா விடக்கூடாது, என் மரணத்துக்கு ராஜேஷும் அந்த திருநங்கையும்தான் காரணம் என்றெல்லாம் பெயரை சொல்லி வைத்திருந்தார் ரதி.
இந்த வாய்ஸ் மெசேஜை கேட்ட சித்தி ஜானகி, பதறிப்போய் ரதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ரதி உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரதியின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ரதியின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரதியின் மரணம் தொடர்பாக அவர் வாய்ஸ் மெசேஜில் கூறிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்..!!



Click it and Unblock the Notifications
