நியோ மேக்ஸ் மோசடி.. ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
சென்னை: நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை.
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்தது. நியோமேக்ஸ் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப் பதியப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை, நியோ மேக்ஸ் தொடர்புடைய சொத்துகளை முடக்கி உள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. நியோ மேக்ஸ் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஏற்கெனவே 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications