சென்னையில் காலையிலேயே இறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
சென்னை: சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்யாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சைதாப்பேட்டை தெற்குமாட வீதியில் உள்ள கலைச்செல்வன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி சேட் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர், கீழ்ப்பாக்கம், தி நகர், கேகே நகர் என சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக இந்த சோதனை நடந்து வருவதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின. இன்று காலை 6 மணியில் இருந்தே இந்த சோதனை நடந்து வருகிறது. சிஆர்பிஎஃப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications