நேர்மை, ஊழல் ஒழிப்பு என படம் எடுத்த ஷங்கருக்கு ஷாக்! பணமோசடி தடுப்பு சட்டம்! சொத்துக்களை முடக்கிய ED
சென்னை: பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய திரைப்படங்களில் நேர்மை, ஊழல் ஒழிப்பு போன்ற கருத்துக்களை ஆழமாக சொல்லி வருபவர்தான் ஷங்கர். இந்நிலையில் இவர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை சென்னை மண்டல அமலாக்கத்துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி ஷங்கருக்கு எதிராக சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை தொடுத்தவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன். அதாவது ஷங்கர் எடுத்த 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், ஷங்கர் கதை திருடிவிட்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழ்நாடன் 'ஜிகுபா' என்கிற கதையை எழுந்தியிருந்ததாகவும், அதனை திருடிதான் ரஜினியை வைத்து எந்திரன் என்கிற கதையை எடுத்ததாகவும் புகார் சொல்லப்பட்டிருந்தது. இதன் மூலம் பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் ஐபிசி, 1860 இன் கீழ் குற்றமிழைத்திருக்கிறார் ன்றும் தமிழ்நாடன் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) அறிக்கையை தமிழ்நாடன் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில், 'ஜிகுபா' கதைக்கும் எந்திரன் கதைக்கும் உள்ள ஒற்றுமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
சரி இந்த குற்றச்சாட்டுக்கும் ஷங்கர் சொத்து முடக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
ஷங்கர் எந்திரன் கதையை எழுதியதாக சொல்லி அதற்காக ரூ.11.5 கோடி வரை ஊதியம் பெற்றிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவேதான் தற்போது சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த படம் மொத்தமாக ரூ.290 கோடி வரை வசூல் செய்திருந்தது.
என்ன வாத்தியாரே இது? நீதி, நேர்மை, 5 ரூபாய் ஊழல் செஞ்சாலும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கனும்னு படம் எடுத்துட்டு, இப்போது அமலாக்கத்துறையின் வறுவலுக்கு ஆளாகி இருக்கிறீயே? என ஷங்கரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications