அன்பில் மகேஷ் தொடர்புடைய ரூ.100 கோடி மோசடி வழக்கு.. என்ட்ரி கொடுத்த அமலாக்கத்துறை.. விசாரணை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி உள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

anbil mahesh poyyamozhi dmk ED

இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் ரெய்டு நடத்தினர்.

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், டிஸ்க்குகள், ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்ட 2 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சம்மனை ஏற்று சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு கடந்த 18 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்காக ஆஜரானார்.

இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆதாரங்கள் மற்றும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+