தமிழ்நாட்டில் 30+ இடங்களில் அமலாக்கத்துறை பரபரப்பு ரெய்டு! ஜாபர் சாதிக் வீடு, புகாரி ஹோட்டலில் சோதனை
சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்காக பிரதமர் சென்னை வரும் அதே நாளில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து பல இடங்களில் முடக்கப்பட்ட உள்ளது. பல இடங்களுக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. சென்னை தியாகராயர் நகரில் வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்திற்காக 6வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் அவர், சென்னை, வேலூர், நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதே நாளில் சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். ஜாபர் சாதிக் தொடர்பான போதை பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
கைது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் அளித்த தகவலின்படி நடந்த இந்த ரெய்டில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில்தான் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இவரிடம் விசாரணை நடக்கும் நிலையில்தான் சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications